IND vs WI:  இந்தியா மற்றும் மேற்கு இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று இரவு எட்டு மணிக்கு தொடங்கவுள்ளது. ஒருநாள் தொடரை வென்ற இந்திய அணி ரோகித் தலைமையில் டி20 தொடரையும் வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். 


அக்டோபரில் தொடங்கவுள்ள டி20 உலககோப்பைக்கு, அங்கீகாரம் பெற்ற அனைத்து அணிகளும் மிகவும் மும்மரமாக தங்களை தயார் செய்து வருகின்றன. இந்திய அணி தொடர்ந்து வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு போட்டிகளில் களமிறங்கி வருகிறது. சமீபத்தில் இங்கிலாந்து உடனான போட்டிகளை முடித்த இந்திய அணி, நாடு திரும்பாமல் மேற்கு இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டது. ஏற்கனவே வங்களாதேசத்துடனான கிரிக்கெட் தொடரினை முடித்துவிட்டு இந்திய அணியுடனான கிரிக்கெட் தொடருக்கு காத்திருந்தது. 


மூன்று ஒருநாள் போட்டி ஐந்து டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் ஏற்கனவே மூன்று ஒருநாள் போட்டிகள் முடிந்த நிலையில், இன்று இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி இரவு எட்டு மணிக்கு நடைபெறவுள்ளது. ஏற்கனவே ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்ற நிலையில், டி20 போட்டியிலும் இந்திய அணி வாகை சூட ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர். உலககோப்பைக்கு முன்னர் நடைபெறும் போட்டி என்பதால் மிகவும் சவாலான அணியான இந்திய அணி வீரர்களின் ஆட்ட நேர்த்தியினை கவனமாக கணிக்க உலககோப்பையில் பங்கேற்கும் மற்ற கிரிக்கெட் அணிகளும் உற்றுநோக்குகின்றன. 


மேற்கு இந்திய அணிகளுடன் ஏற்கனவே 20 சர்வதேச டி20 போட்டிகளில் நேரடியாக எதிர் கொண்டுள்ள இந்திய அணி, 13 போட்டிகளிலும், மேற்கு இந்திய அணி 6 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை. இந்திய அணியின் டி20 கேப்டனாக ரோகித் நியமிக்கப்பட்டதில் இருந்து, இந்திய அணி டி20 தொடரை இழந்தது இல்லை. மேற்கு இந்திய அணியுடனான இந்த தொடரையும்  வெல்லும் என ரசிகர்கள் எதிர்பாக்கின்றனர். இந்த தொடரில் ஃபர்ம் அவுட்டில் இருக்கும் இந்திய அணியின் விராட் கோலி இடம் பெறவில்லை. மேலும், இந்திய அணியைப் பொறுத்தவரையில்  அனுபவம் வாய்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், ஜடேஜா, ஹர்திக் பாண்டியா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்கள் களமிறங்கவுள்ளனர். ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பெற அதிக வாய்ப்புகள் உள்ளன. இரவு எட்டு மணிக்கு தொடங்கவுள்ள இந்த போட்டியினை ஃபேன்கோடில் லைவ் ஆக பார்க்கலாம்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண