இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரே ஓவரில் 35 ரன்கள் விளாசி  ஜாம்பவான்களின் சாதனையை நேற்று முறியடித்தார் இந்திய அணியின் வீரர் பும்ரா.  அவர் ஸ்டூவர்ட் பிராட்டின் ஒரு ஓவரில் 2 சிக்ஸர், 4 பவுண்ட்ரி மற்றும் எக்ஸ்ட்ராஸ் உட்பட மொத்தம் 35 ரன்களை பறக்க விட்டார். இதன் மூலம், இதற்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில்  ஜாம்பவான்கள் நிகழ்த்திய அனைத்து தனிநபர் சாதனைகளையும் முறியடித்துள்ளார் பும்ரா. இதனால் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் உலக சாதனைக்கான இலக்கு என்பது 35 ரன்கள் என்ற உச்சத்தினை தொட்டுள்ளது.


இதற்கு முன்னர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் அதிக ரன்களை அடித்த வீரர்கள்  என்ற உலக சாதனைக்குச் சொந்தக்காரர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் லாரா. அவர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2002-2003ல் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், தென் ஆப்பிரிக்க பவுலர் பீட்டர்சனின் ஒரே ஓவரில் 28 ரன்கள் அடித்ததே உலக சாதனையாக இருந்தது. இந்த ஓவரில் லாரா 4,6,6,4,4,4 என்ற வரிசையில் ஆறு பந்துகளையும் மைதானத்தின் பறக்கவிட்டார். 






இந்தநிலையில், ஸ்டூவர்ட் பிராட் தனது டெஸ்ட் கிரிக்கெட் சாதனையை முறியடித்ததை அடுத்து தென்னாப்பிரிக்காவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ராபின் பீட்டர்சன் பதிலளித்துள்ளார். அதில், “இன்று எனது சாதனையை இழந்ததில் வருத்தமாக இருக்கிறது. சரி என்றாவது ஒரு நாள் எப்படிப்பட்ட சாதனைகள் இருந்தாலும் அது உடைக்கப்பட்டுதானே ஆக வேண்டும். இந்த சாதனையை முறியடிக்க 19 வருடங்கள் மட்டுமே ஆனது என்று குறிப்பிட்டுள்ளார். 


5 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து தடுமாறிய இந்திய அணி, முதல் இன்னிங்சில் 416 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பந்த் 111 பந்துகளில் 146 ரன்களும், ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 104 ரன்களும் எடுத்தனர். பும்ரா 16 பந்துகளில் 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார், ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 


தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 84 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண