Rishabh Pant : கார் விபத்தினால் டேராடூன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் மும்பைக்கு மாற்ற இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. 

Continues below advertisement

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென் ரிஷப் பண்ட் எதிர்பாராதவிதமாக கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். உத்தரகாண்ட் அடுத்த ரூர்க்கியின் குருகுல் நர்சன் பகுதியில்  நடந்த விபத்தில் சிக்கிய  ரிஷப் பண்டை,  அவ்வழியக சென்றவர்கள் மீட்டு  108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  

விரைந்து குணமடைய வேண்டும் என பிரார்த்திக்கிறேன், வலிமையாக இரு சகோதரா என  ஸ்ரேயாஸ் அய்யர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதேபோன்று, ஜடேஜா உள்ளிட்ட பல வீரரக்ளும் ரிஷப் பண்ட் விரைந்து குணமடைய வேண்டும் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Continues below advertisement

பிசிசிஐ அறிக்கை:

முன்னதாக, விபத்தில் ரிஷப் பண்டின் தலைப்பகுதியில் 2 வெட்டுகளும், வலது முழங்காலில் தசை நார் கிழிந்துள்ளதாகவும், அதேநேரம் தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தின் சிசிடிவி காட்சிகள்:

இதற்கு மத்தியில், அவர் விபத்தில் சிக்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில், வேகமாக சென்ற கார் டிவைடரில் சிக்கியது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. ஆபத்தான கட்டத்தை அவர் கடந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். தனது தாயாருக்கு சர்பிரைஸ் கொடுப்பதற்காகவும் புத்தாண்டை தனது குடும்பத்துடன் கொண்டாடவும் டெல்லியில் இருந்து ரூர்க்கியில் உள்ள தனது வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.

ரிஷப் பண்ட் வாக்குமூலம்:

தீவிர சிகிச்சைக்கு பிறகு கண்விழித்த ரிஷப் பண்ட், இந்த விபத்து எப்படி நடந்தது என்று காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில், ”நான்தான் காரை ஓட்டி வந்தேன். வாகனம் ஓட்டும்போது எதிர்பாராத விதமாக கண் அசந்துவிட்டேன். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து கண் இமைக்கும் நேரத்தில் சாலையோரம் உள்ள டிவைடரில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது என ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார்.

மேல் சிகிச்சை:

தற்போது மேல் சிகிச்சைக்காக  ரிஷ்ப் பண்ட் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு மாற்ற பிசிசிஐ முடிவு செய்துள்ளது. அவருக்கு தசைநார் கிழிந்ததற்கான கூடுதல் உதவிக்காக அவரை மும்பைக்கு மாற்றவுள்ளதாக கூறப்படுகிறது.