கடந்த 16 மாதங்களுக்கு பிறகு இந்திய ஜெர்சி அணிந்து இன்று நடைபெறும் பயிற்சி டி20 போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக விளையாட உள்ளார் ரிஷப் பண்ட். 


இந்திய ஜெர்சியில் ரிஷப் பண்ட்:


கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட சாலை விபத்தில் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரிஷப் பண்ட் பலத்த காயம் அடைந்தார். அதன்பின்னர் பல்வேறு கட்ட  மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் உடல் நலம் தேறினார். ஆனால் 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் முக்கியமான போட்டிகளில் அவரால் விளையாட முடியவில்லை.


இச்சூழலில் தான் மெல்ல மெல்ல பல பயிற்களை பெற்றார். இது தொடர்பான புகைப்படங்களை சில நேரங்களில் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தார். இதனை பார்க்கும் ரசிகர்கள் மீண்டும் தங்களது ஆட்டத்தை பார்க்க வேண்டும் விரைவில் கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்புங்கள் என்றும் ரிஷப் பண்டிற்காக பிரார்த்தனைகளும் மேற்கொண்டனர். 


இந்நிலையில் தான் மிக நீண்ட நாட்களுக்கு பிறகு கிரிக்கெட் போட்டிகளில் கம்பேக் கொடுத்தார் ரிஷப் பண்ட். அதாவது டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இவர் கடந்த மார்ச் 23 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக களம் இறங்கினார். அதன்படி அந்த சீசனில் 13 போட்டிகளில் விளையாடி 446 ரன்கள் எடுத்தார். அதிகபட்சமாக 88 ரன்கள் எடுத்தார். இதில் 3 அரைசதங்கள் அடங்கும். ஆனால் ஐபிஎல் சீசனில் குவாலிபியர் போட்டிகளுக்கு தகுதி பெறாமல் வெளியேறியது டெல்லி கேபிட்டல்ஸ் அணி.  


கர்ஜிக்க காத்திருக்கும் சிங்கம்:


ஐபிஎல் போட்டிகள் மூலம் கம்பேக் கொடுத்திருந்தாலும் இந்திய அணி ஜெர்சியில் எப்போது விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்தது. ரசிகர்களில் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றார் போல ஐசிசி டி20 உலகக் கோப்பை அணியிலும் இடம் பிடித்தார் ரிஷப் பண்ட்.


இச்சூழலில் தான் அமெரிக்காவிற்கு சென்றுள்ள அவர் சர்வதேச போட்டிக்கு தயாராகும் வகையில் பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.





அதேநேரம் இன்று (ஜுன் 1) வங்கதேசம் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் 16 மாதங்களுக்கு பிறகு விளையாட இருக்கிறார் ரிஷப் பண்ட். இது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் பகிர்ந்து வரும் ரசிகர்கள் இந்திய அணி நன்றாக விளையாட வேண்டும் என்று கமெண்டுகளை பதிவு செய்துள்ளனர். 


மேலும் படிக்க: First ICC Men's T20 World Cup: முதல் டி20 உலகக் கோப்பை எப்போது தொடங்கியது? எந்த அணி கோப்பையை வென்றது..? முழு விவரம் இதோ!


 


மேலும் படிக்க: T20 World Cup 2024: டி20 அட்டவணை..இந்திய நேரத்தில் எப்போது பார்ப்பது? முழு விவரம் உள்ளே!