இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அண்களுக்கு இடையிலான உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நாளை அதாவது ஜூன் 7ஆம் தேதி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கவுள்ளது. பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரோகித் சர்மாவின் இடது கட்டை விரலில் காயம் ஏற்படவே அவர் உடனடியாக பயிற்சியை கைவிட்டுவிட்டு வெளியேறினார். இதனால் அவரால் விளையாட முடியுமா முடியாதா என்ற கேள்விகள் அனைவரது மத்தியிலும் இருந்தது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்தித்த ரோகித் சர்மா தனது ஓய்வு உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுகளுக்கு பதில் அளித்தார்.
முதலில், ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலியா கோப்பையை வெல்வதற்கான அனைத்து வாய்ப்புகளும் இருப்பதாக கூறியுள்ளாரே அது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேட்கப்பட்ட கேள்விக்கு, ரிக்கி பாண்டிங்கிற்கு அவரது கருத்தை வெளிப்படுத்த உரிமை உண்டு. ஆனால் அது குறித்து நாங்கள் கவலைப் படவில்லை. இந்த உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து பலரும் பல கருத்துகளை கூறி வருகின்றனர். அவற்றையெல்லாம் மனதில் எடுத்துக்கொள்ளக் கூடாது. நமது அணி குறித்து நமக்கு தெரியும், மேலும், போட்டியின் நிலைமைக்கு ஏற்ற வகையில் நாம் சிறப்பாக விளையாடினால் வெற்றி நமக்கு சாதகமாகும் என கூறினார். இன்னும் ப்ளேயிங் லெவன் குறித்து முடிவு செய்யவில்லை. அது இன்று மாலை அணியில் தனி மீட்டிங் நடத்தி முடிவு எடுப்போம் என கூறினார்.
மேலும் அவரது ஓய்வு எப்போது என கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு அவர், நான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற முடிவு செய்யும் போது, நான் ஒன்று அல்லது இரண்டு சாம்பியன்ஷிப்களை வென்றால் நன்றாக இருக்கும் என கூறினார். ரோகித் சர்மா தனது ஓய்வு குறித்து கூறியுள்ளது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. இதனால் இந்திய கிரிக்கெட் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற விவாதமும் கிளம்பியுள்ளது. 36 வயதான ரோகித்சர்மா இதுவரை 49 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 9 சதங்கள், 1 இரட்டை சதம், 14 அரைசதங்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 3379 ரன்களை விளாசியுள்ளார். அதிகபட்சமாக 212 ரன்கள் எடுத்துள்ளார்.
ரோகித்சர்மா:
இந்திய கேப்டன் ரோகித்சர்மா இதுவரை ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பைகளுக்காக 5 முறை இறுதிப்போட்டிகளில் ஆடியுள்ளார்
2007 டி20 உலககோப்பை:
2007ம் ஆண்டு நடந்த டி20 உலககோப்பை இறுதிப்போட்டியில் முதன்முறையாக ரோகித்சர்மா சாம்பியன் கோப்பை ஒன்றிற்கான இறுதிப்போட்டியில் களமிறங்கினார். அந்த போட்டியில் 16 பந்தில் 30 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
2013 சாம்பியன்ஸ் டிராபி:
மினி உலககோப்பை எனப்படும் சாம்பியன்ஸ் டிராபிக்காக 2013ம் ஆண்டு நடந்த போட்டியில் இங்கிலாந்திற்கு எதிரான இறுதிப்போட்டியில் களமிறங்கிய ரோகித்சர்மா 14 பந்தில் 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
2014 டி20 உலககோப்பை:
டி20 உலககோப்பையை 2வது முறையாக கைப்பற்றும் வாய்ப்பிற்காக இந்தியா 2014ம் ஆண்டு இலங்கையுடன் இறுதிப்போட்டியில் மோதியது. அந்த போட்டியில் ரோகித்சர்மா 26 பந்துகளில் 29 ரன்கள் மட்டுமே ரோகித் எடுத்தார்.
2015 சாம்பியன்ஸ் டிராபி:
சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றுவதற்காக 2015ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித்சர்மா டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021:
கடந்த 2021ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் 34 ரன்களும், 2வது இன்னிங்சில் 30 ரன்களும் ரோகித்சர்மா எடுத்தார்.
மேற்கண்ட போட்டிகளில் இந்திய அணி 2007 டி20 உலககோப்பையும், 2013 சாம்பியன் டிராபியையும் கைப்பற்றியது. மற்ற ஆட்டங்களில் இந்திய அணி தோல்வியையே தழுவியது.