நாடு முழுவதும் இன்று 73ஆவது குடியரசுத் தினம் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. குடியரசுத் தினத்தை முன்னிட்டு டெல்லி ராஜ்பாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியை ஏற்றினார். அதேபோல் அந்தந்த மாநிலங்களில் ஆளுநர்களும் தேசிய கொடியை ஏற்றினர். குடியரசுத் தினம் தொடர்பான வாழ்த்துகளை பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 


இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், “1950ஆம் ஆண்டு இதேநாளில் இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த அரசியலமைப்பு சட்டத்தில் பல்வேறு உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் நான் இன்று பேசுவது வேறு ஒரு உரிமையை பற்றி. இந்த உரிமையை ஐநா தன்னுடைய குழந்தைகள் உரிமையில் சேர்த்துள்ளது. இதை இந்தியாவு ஒத்துகொண்டுள்ளது. 






அதாவது விளையாட்டு என்பது குழந்தைளின் மனம் மற்றும் உடல் ஆரோக்யத்திற்கு எவ்வளவு முக்கியமானது என்பதை ஐநா உணர்ந்துள்ளது. அதன்காரணமாகவே இதை குழந்தைகள் உரிமைகளில் சேர்த்துள்ளது. என்னை பொறுத்தவரை இந்த உரிமைகள் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும். விளையாட்டு அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்று. இந்தியா போன்று விளையாட்டை ரசிக்கும் நாட்டில் நாம் விளையாட்டு பார்த்து மட்டும் இருந்துவிட கூடாது. நமக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் விளையாட வேண்டும். தற்போது கொரோனா தடுப்பு நடைமுறைகள் அமலில் இருப்பதால் அனைவரும் அதை சரியாக கடைபிடித்து நேரம் கிடைக்கும் போது விளையாட வேண்டும்” எனக் கூறியுள்ளார். 


இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பிரிவு 21ல் பல்வேறு உரிமைகளை ஒன்று சேர்ந்து வரும். அதில் விளையாடுவதும் ஒரு அடிப்படை உரிமையாக்க வேண்டும் என்று பலரும் இந்த வீடியோவை வைத்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். குடியரசு தினத்தன்று தன்னுடைய வாழ்த்துடன் விளையாட்டின் முக்கத்துவத்தை அதை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக கருத வேண்டும் என்றும் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். அவரின் இந்த வீடியோ தற்போது வேகமாக வைரலாகி வருகிறது. 


மேலும் படிக்க: “ஒரே ஒரு ஃபோன் கால், பிரச்சனை ஓவர்” - கேப்டன்சி சர்ச்சைக்கு கபில் அட்வைஸ்