இந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் வண்ணமயமான ஹோலி கொண்டாடப்பட்டாலும், இதற்கு அதிகளவில் பெயர்போனது வட இந்தியாதான். மொத்தம் 2 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் ஒருவர் மற்றொருவர் மீது பல வண்ணங்களை பூசி மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர். மேலும், ஹோலி நாட்களில் இனிப்பு வழங்கி ஆட்டம், பார்ட்டம் என வட இந்தியாவே அமர்களப்படும். 


இந்தநிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி கேம்பில் கோலாகலமாக ஹோலி பண்டிகையை கொண்டாடினர். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் படுவேகமாக வைரல் அடித்து வருகிறது. ஹோலி கொண்டாடும் புகைப்படங்களை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் அணியினர் ரிச்சா கோஷ், ஹீதர் நைட் மற்றும் பலரின் படங்களை பதிவேற்றியுள்ளனர். 






ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஹோலியை தனது குழு உறுப்பினர்கள் மற்றும் துணை ஊழியர்களுடன் கொண்டாடினார். இந்த கொண்டாட்டத்தின்போது வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களான எல்லிஸ் பெர்ரி, சோஃபி டிவைன், ஹீதர் நைட் மற்றும் பலர் இந்திய கிரிக்கெட் வீரர்களுடன் ஹோலி கொண்டாடினர்.


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் ஆகிய இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளன. இன்று மும்பையில் உள்ள பிரபோர்ன் மைதானத்தில் இரு அணிகளும் மோதும் போட்டி மிகவும் முக்கியமானது. இதில், எந்த அணி வெற்றிபெறுமோ நாக் அவுட் சுற்று வாய்ப்பினை தக்க வைக்கும். 


குஜராத் ஜெயண்ட்ஸ் களமிறங்கும் இன்றைய போட்டியில் கேப்டன் பெத் மூனி, காயம் காரணமாக விளையாடுவதில் சந்தேகம். ஆர்சிபி அணியை பொறுத்தவரை, தங்களது முதல் போட்டியில் பந்துவீச்சில் சொதப்பினர். மும்பை அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் பேட்டிங்கில் சொதப்பினர். 


இதுகுறித்து பேசிய கேப்டன் ஸ்மிருதி மந்தனா, “ நாங்கள் சிறந்த ஆட்டத்தையே வெளிப்படுத்த விரும்பி, தவறவிட்டோம். ஆனால், கடினமாக போராடி திரும்பி வருவோம். இரண்டு அல்லது மூன்று பேட்ஸ்மேன்கள் மட்டுமே 20 அல்லது 30 ரன்கள் வரை எடுத்தனர். நான் உட்பட சில பேட்ஸ்மேன்கள் நல்ல ஸ்கோரை எடுக்க முடியவில்லை. 


இதுதொடர்பா நாங்கள் உட்கார்ந்து பேசுவோம். சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்த தொடர்ந்து முயற்சிப்போம்” என்று தெரிவித்தார். 


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் பீர்மியர் சீசனில் இதுவரை இரண்டு தோல்விகளுடன் தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது. 


கடந்த திங்களன்று ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபியை எளிதாக வீழ்த்தியது. மும்பைக்கு எதிரான போட்டியில் பெங்களூர் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து 155 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். பின்னர் மும்பை இந்தியன்ஸ் 34 பந்துகள் மீதமுள்ள நிலையில் இலக்கைத் துரத்தி வெற்றிபெற்றது. 


ஆர்சிபி பேட்ஸ்மேன்களின் மோசமான ஃபார்ம்தான் அவர்கள் தொடரில் தோல்வியடைந்ததற்கு முக்கிய காரணம்.