இந்தியா - வங்கதேச டெஸ்ட்:

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்த வகையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இதில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபரா வெற்றி பெற்றது.

இதனைத்தொடர்ந்து கான்பூரில் செப்டம்பர் 27 இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். ஆனால் தொடர்ந்து அங்கு நிலவிய வானிலை காரணமாக போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து நான்காவது நாளான இன்று (செப்டம்பர் 30) போட்டி தொடங்கியது.

300 விக்கெட் எடுத்த ஜடேஜா:

இதில், 74.2 ஓவர்கள் முடிவில் 233 ரன்களில் வங்கதேச அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் கலீல் அஹமது விக்கெட்டை எடுத்ததன் மூலம் ரவீந்திர ஜடேஜா ஒரு சாதனை படைத்தார். அதாவது சர்வதேச டெஸ்ட் போட்டியில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை ரவீந்திர ஜடேஜா படைத்துள்ளார். 

அதேபோல், 3,122 ரன்களை வேகமாக எடுத்த வீரர் என்ற சாதனையையும் ரவீந்திர ஜடேஜா படைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் 300 விக்கெட்டுகளை வேகமாக எடுத்த வீரராகவும் ஜடேஜா இருக்கிறார். 92 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் 54 வது டெஸ்ட் போட்டியில் அஸ்வினும், 66வது டெஸ்ட் போட்டியில் அனில் கும்ப்ளேவும், 83 வது டெஸ்ட் போட்டியில் கபில் தேவும் 300 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கின்றனர். இந்த நிலையில் தான் தன்னுடைய 74 வது டெஸ்ட் போட்டியில் 300வது விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ரவீந்திர ஜடேஜாவும் இதில் இணைந்துள்ளார்.

 

3000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகளை மிக வேகமாக எடுத்தவர்கள் போட்டிகள் ரன்கள்
 விக்கெட்டுகள்
இயன் போத்தம் 72 4153 305
ரவீந்திர ஜடேஜா 74* 3122 300*
இம்ரான் கான் 75 3000 341
கபில் தேவ் 83 3486 300
ரிச்சர்ட் ஹாட்லீ 83 3017 415
ஷான் பொல்லாக் 87 3000 353
ஆர் அஸ்வின் 88 3043 449
டேனியல் வெட்டோரி 94 3492 303
சமிந்த வாஸ் 108 3050 351
ஸ்டூவர்ட் பிராட் 121 3008 427
ஷேன் வார்ன் 142 3018 694