தமிழ்நாடு பிரீமியர் லீக்:
கடந்த ஜூன் 29 ஆம் தேதி டி20 உலகக் கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி. இதனைத்தொடர்ந்து ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. மறுபுறம் தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டிகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய அணியின் வேகபந்து வீச்சாளரான நடராஜன் ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணியில் விளையாடி வருகிறார். அதேபோல் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியில் விளையாடி வருகிறார். இவரது தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் அணியானது விளையாடிய 2 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.
வைரல் வீடியோ:
இந்நிலையில் தான் அஸ்வின் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது அஸ்வின் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பயணங்க்கள் முடிவதில்லை என்ற பெயரில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் நடராஜனுடன் ஹெல்மட்டை மாட்டிக்கொண்டு அஸ்வின் பைக்கில் ஜாலியாக ரைட் செய்கிறார். இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள், "இரண்டு தமிழக வீரர்களை ஒரே வீடியோவில் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது" என்பது போன்ற கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: Gautam Gambhir: பயிற்சியாளர் ஆனதும் கம்பீர் வீரர்களுக்கு வைத்த முதல் வேண்டுகோள் - என்ன?
மேலும் படிக்க: TNPL : டிஎன்பிஎல் போட்டியில் திருப்பூர் அணிக்கு கேப்டனான சாய் கிஷோர் ; தோல்வியில் இருந்து மீளுமா?