ஹிந்தி மொழியில் யூடியூப் சேனல்:


இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின். தமிழ் நாட்டைச் சேர்ந்த இவர் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 101 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். அதில் 37 முறை ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். அதே போல் 10 விக்கெட்டுகளை 8 முறையும்  4 விக்கெட்டுகளை 25 முறையும் வீழ்த்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 522 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 156 விக்கெட்டுகளையும் கைப்பற்றி இருக்கிறார்.


சர்வதேச அளவில் புகழ் பெற்ற விளையாட்டு வீரர்கள் அவர்களது அன்றாட வாழ்வில் நடைபெறும் சுவாரஸ்ய சம்பவங்களை சமூக வலைதளங்களின் மூலம் பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், ஹர்பஜன் சிங் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் யூடியூப் சேனல் மூலம் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். அண்மையில் கூட கால்பந்து ஜாம்பவன் கிறிஸ்டியானோ ரொனால்டோ யூடியூப் சேனல் தொடங்கினார். அவருக்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு அளித்தனர்.


17.7 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் சச்சின் டெண்டுல்கரை பின் தொடர்கின்றனர். அதே போல் ஹர்பஜன் சிங் 5.2 லட்சம் சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ளார். அந்த வகையில் ரவிச்சந்திரன் அஸ்வின் 15.4 லட்சம் சப்ஸ்கிரைபர்களை கொண்டுள்ளார். இவரது யூடியூப் சேனலில் தமிழ் மொழியில் தான் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.


 





கிரிக்கெட் வீரர்களுடனான கலுந்துரையாடலை ஆங்கில மொழியில் வீடியோக்களாக பதிவேற்றி வெளியிட்டு வந்தார் அஸ்வின். இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட், கே.எல்.ராகுல், குல்தீப் யாதவ் உள்ளிட்டோருடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளை வெளியிட்டு இருக்கிறார்.


இச்சூழலில் ஹிந்தி மொழி பேசக்கூடிய ரசிகர்கள் தங்களது மொழியிலும் ஒரு யூடியூப் சேனல் தொடங்குமாறு அஸ்வினிடம் கோட்டுக்கொண்டனர். இதனைத்தொடர்ந்து Ash Ki Baat என்ற பெயரில் புதிய யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார் அஸ்வின். தமிழ் மொழியில் அஸ்வின் யூடியூப் சேனல் தொடங்கிய போது அவருக்கு ரசிகர்கள் அதிக அளவு ஆதரவு கொடுத்தனர். அதேபோல், இப்போது ஹிந்தி மொழியில் யூடியூப் சேனல் புதிதாக தொடங்கி உள்ள சூழலில் ரசிகர்களின் ஆதரவை எதிர் நோக்கி காத்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.


 


மேலும் படிக்க: WTC Points Table:உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - முன்னேறிய இலங்கை! முதல் இடம் யாருக்கு?


 


மேலும் படிக்க: IND vs BAN:கே.எல்.ராகுல் இடத்தை பிடித்த ஜெய்ஸ்வால் - ஃபீல்டிங் பயிற்சியாளரை பாராட்டிய அஸ்வின்!