நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 63 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி வரும் 2025 ஆம் ஆண்டு நடைபெறஉள்ளது. முன்னதாக நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி விளையாடி வருகிறது. அதே போல் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியும் விளையாடி வருகிறது. 

முன்னேறிய இலங்கை அணி:

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணி விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி இன்று நடந்து முடிந்தது. இந்த போட்டியில் இலங்கை அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி பெற்றது. இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இலங்கை அணி மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

அதேபோல், வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியுடன் விளையாடுகிறது.

இதில், முதல் டெஸ்ட் போட்டி கடந்த செப்டம்பர் 19 ஆம் தேதி தொடங்கியது. நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் மாயஜால சுழலில் வங்கதேச அணி சுருண்டது. அதன்படி இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவின் புள்ளிகள் சதவீதம் (PCT) 71.66 ஆக அதிகரித்தது, 10 டெஸ்டில் இருந்து 86 புள்ளிகளைக் குவித்தது. இந்தியா  இப்போது இரண்டாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவை விட 9.16 சதவீத புள்ளிகளால் முன்னிலை பெற்றுள்ளது. மறுபுறம், வங்கதேசம் தோல்வியைத் தொடர்ந்து நான்காவது இடத்திலிருந்து ஆறாவது இடத்திற்கு வீழ்ந்துள்ளது, அவர்களின் PCT 45.83 இலிருந்து 39.28 ஆக குறைந்துள்ளது.

WTC 2023-25 ​​புதுப்பிக்கப்பட்ட புள்ளிகள் அட்டவணை:

நிலை

அணிகள்

போட்டிகள்

வெற்றி

தோல்வி

டிரா

NR

புள்ளி

PCT

1

இந்தியா

10

7

2

1

0

86

71.67

2

ஆஸ்திரேலியா

12

8

3

1

0

90

62.5

3

இலங்கை

8

3

3

0

0

36

50

4

நியூசிலாந்து

7

3

4

0

0

36

42.86

5

இங்கிலாந்து

16

8

7

1

0

81

42.19

6

வங்கதேசம்

7

3

4

0

0

33

39.29

7

தென்னாப்பிரிக்கா 

6

2

3

1

0

28

38.89

8

பாகிஸ்தான்

7

2

5

0

0

16

19.05

9

வெஸ்ட் இண்டீஸ்

9

1

6

2

0

20

18.52