ரெடியாகும் ரோஹித் படை:


அண்மையில் இலங்கை அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணி விளையாடியது. இதில் டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றாலுன் ஒரு நாள் போட்டியில் தோல்வி அடைந்தது. இதனை அடுத்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு இந்திய அணி டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. அந்தவகையில் வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் செப்டம்பர் 19 ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. முன்னதாக கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி இந்திய அணியின் மூத்த வீரர்கள் சென்னைக்கு வந்தனர்.


அதாவது பிசிசிஐ வங்கதேச அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதகா பயிற்சி முகாம் ஒன்றை அறிவித்திருந்தது. அதன்படி இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், அஸ்வின் உள்ளிட்டோர் இந்த பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூறியிருந்தது. அதன்படி அனைவரும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதன் மூலம் வங்கதேச அணி அதே முனைப்போடு இந்தியாவிற்கு எதிராக விளையாட இருக்கிறது. 


பந்து வீச்சு பயிற்சியில் ஜெய்ஸ்வால்:


இந்திய அணியில் தற்போது மொத்தம் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் ஆடும் லெவன் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜாவிற்கு வாய்ப்பு வழங்கலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதே மூன்றாவதாக ஒரு சுழற்பந்து வீச்சாளர் தேவை படும் பட்சத்தில் குல்தீப் யாதவ் அல்லது அக்சர் படேல் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். இச்சூழலில் தான் இந்திய அண்யின் இடது கை தொடக்க ஆட்டக்காரரான இளம் வீரர் யஜஸ்வி ஜெய்ஸ்வால் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்து வீசலாம் என்று கூறப்படுகிறது. இதற்கான பயிற்சியையும் அவர் தீவிரமாக எடுத்து வருகிறார்.


அதனால் மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக ஜெய்ஸ்வாலை களம் ரோஹித் ஷர்மா களம் இறக்க வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதற்கான காரணம் இந்திய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளரான கவுதம் கம்பீர் தொடர்ந்து அணியில் பல்வேறு மாற்றங்களை செயல்படுத்தி வருகிறார். அந்தவகையில், சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங் ஆகியோரை கடந்த போட்டிகளின் போது பந்து வீச்சாளர்களாகவும் பயன்படுத்தினார் என்பதால் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் எந்த மாதிரியான யுக்தியை வேண்டுமானாலும் அவர் செயல்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்திய டெஸ்ட் அணி:


ரோஹித் ஷர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், ஜஸ்பிரித் பும்ரா, யாஷ் தயாள்.


வங்கதேச டெஸ்ட் அணி:


நஜ்முல் ஹொசைன் சாண்டோ (கேப்டன்), மஹ்முதுல் ஹசன் ஜாய், ஜாகிர் ஹசன் , ஷத்மான் இஸ்லாம் , மொமினுல் ஹக், முஷ்பிகுர் ரஹீம், ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹசன் மிராஸ், தைஜுல் இஸ்லாம் , நயீம் ஹசன், நஹித் ரனா, ஹசன் மஹ்முத் ரனா தஸ்கின் அகமது , சையத் காலித் அகமது, ஜாக்கர் அலி அனிக்