எல்லா காலத்திலும் சிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக கருதப்படும் இந்திய ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். 


ரவிசந்திரன் அஸ்வின் இந்திய அணிக்காக இதுவரை 94 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 27.22 சராசரியில் 5 சதங்கள் மற்றும் 14 அரைசதங்களுடன் 3,185 ரன்கள் எடுத்துள்ளார். இவரது சிறந்த ஸ்கோர் 124 ஆகும். பந்துவீச்சை பொறுத்தவரை, அஸ்வின் இதுவரை 23.65 என்ற சராசரியுடன் 489 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இவரது சிறந்த பந்துவீச்சு 7/59 ஆகும். மேலும், டெஸ்டில் இவர் 24 நான்கு விக்கெட்டுகளையும், 34 ஐந்து விக்கெட்டுகளையும், எட்டு பத்து விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். 


டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தும் அஸ்வின்: 


டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் ஒன்பதாவது இடத்தில் உள்ளார் அஸ்வின். இத பட்டியலில் இலங்கை அணியின் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணிக்காக அதிக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் இந்திய ஜாம்பவான் 619 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார். 


அஸ்வின் தனது 45வது டெஸ்டில் 250 விக்கெட்டுகளையும், 54வது டெஸ்டில் 300 விக்கெட்டுகளையும் எடுத்தார். இந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 250 மற்றும் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் அஸ்வின். அவர் தனது 18வது போட்டியில் 100 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.


டெஸ்ட் போட்டியில் அதிகமுறை தொடர் ஆட்டநாயகன் வென்றவர் பட்டியலில் அஸ்வின் 10 முறை வென்று இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் 11 தொடர் ஆட்டநாயகன் விருது பெற்று முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். 


ஒருநாள் போட்டி: 


இந்திய அணிக்காக 113 ஒருநாள் போட்டிகளில் ஆல்ரவுண்டர் 33.49 சராசரியுடன் 151 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சிறந்த பந்துவீச்சு 4/25 ஆகும். இந்த வடிவத்தில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்களை வீழ்த்திய 14வது இந்திய வீரர் அஸ்வின். மேலும் 63 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 16.44 சராசரியுடன் ஒரு அரை சதம் உள்பட 707 ரன்கள் எடுத்துள்ளார்.


டி20: 


65 டி20 போட்டிகளில் விளையாடி 23.22 சராசரியில் 72 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். டி20 வடிவத்தில் இவரது சிறந்த பந்துவீச்சு 4/8 ஆகும். 


ஒட்டுமொத்தமாக 272 சர்வதேச போட்டிகளில், 214 இன்னிங்ஸ்களில் ஐந்து சதங்கள் மற்றும் 15 அரைசதங்களுடன் 24.40 சராசரியுடன் 4,076 ரன்களை எடுத்துள்ளார் அஸ்வின். 25.70 சராசரியில் 712 விக்கெட்டுகளையும், சர்வதேச கிரிக்கெட்டில் 34 ஐந்து விக்கெட்டுகளையும் எட்டு பத்து விக்கெட்டுகளையும் பெற்றுள்ளார்.


2011 ஆம் ஆண்டு ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் அஸ்வின் இடம்பிடித்து இரண்டு போட்டிகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2013 பட்டத்தை வென்ற அணியில் அவர் ஐந்து போட்டிகளில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். சாம்பியன் டிராபி போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களில் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்தார் அஸ்வின். 


ரவிசந்திரன் அஸ்வின் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் ஆகிய அணிகளுக்காக விளையாடியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடி அஸ்வின், இரண்டு ஐபிஎல் பட்டங்களையும். இரண்டு சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டங்களையும் வென்றுள்ளார். 197 போட்டிகளில் 171 விக்கெட்டுகளுடன், ஐபிஎல் வரலாற்றில் ஐந்தாவது சிறந்த பந்துவீச்சாளராக திகழ்ந்து வருகிறார். ஐபிஎல் தொடரில் ஒரு அரைசதத்துடன் 713 ரன்கள் குவித்துள்ளார்