போர்ட் ஆஃப் ஸ்பெயினில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. அதிலும், ஆஃப் ஸ்பின்னர் அஸ்வின் இந்த தொடரில் பல்வேறு சாதனைகளை குவித்து வருகிறார்.
இந்த டெஸ்டில் அஸ்வின் இதுவரை மூன்று விக்கெட்களை வீழ்த்தி, இந்தியாவின் இரண்டாவது வெற்றிகரமான பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதே நேரத்தில், அவர் தனது பெயரில் மற்றொரு பெரிய சாதனையையும் செய்துள்ளார்.
அதிக விக்கெட்கள்:
சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை ரவிசந்திரன் அஸ்வின் படைத்துள்ளார். தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் 712 விக்கெட்டுகளை அவரது பெயர் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் அனில் கும்ப்ளே (956 விக்கெட்) முதலிடத்தில் உள்ளார். அஸ்வின் ஹர்பஜன் சிங்கை (711 விக்கெட்) பின்தள்ளினார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய பந்துவீச்சாளரால் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியல்:
956 - அனில் கும்ப்ளே
712 - ரவிச்சந்திரன் அஷ்வின்
711 - ஹர்பஜன் சிங்
687 - கபில் தேவ்
610 - ஜாகீர் கான்
கும்ப்ளேவை பின்னுக்கு தள்ளிய அஸ்வின்:
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அதிக வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அனில் கும்ப்ளேவை பின்னுக்கு தள்ளிவிட்டு அஸ்வின் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அஸ்வின் தற்போது 75 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கும்ப்ளே 74 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த சாதனை பட்டியலில் கபில் 89 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியல்:
89- கபில்தேவ்
75- ரவிச்சந்திரன் அஷ்வின்
74- அனில் கும்ப்ளே
68- ஸ்ரீனிவாஸ் வெங்கடராகவன்
65- பகவத் சந்திரசேகர்.
இரண்டாவது டெஸ்டின் நிலைமை என்ன..?
இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான சூழ்நிலையை எட்டியுள்ளது. நான்காவது நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 365 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நிர்ணயித்துள்ளது இந்திய அணி. இதையடுத்து, இன்றைய நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 விக்கெட்டுக்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. ஐந்தாவது நாளில், இந்தியா வெற்றி பெற 8 விக்கெட்டுகளை எடுக்க வேண்டும், வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற 289 ரன்கள் எடுக்க வேண்டும்..