டாக்காவில் உள்ள ஷேரே பங்களா தேசிய மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்டில் வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி கடுமையான தோல்வியை சந்திக்க இருந்தது. அப்போது இந்திய அணியிம் மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் மூத்த ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் வெற்றி கூட்டணியை உருவாக்கி, இந்தியாவுக்கு வெற்றியை உறுதிசெய்தனர். மேலும் 2-0 என்ற கணக்கில் வங்கதேச அணியை க்ளீன் ஸ்வீப் செய்ய இந்திய அணியின் வெற்றிக்கு உதவினர்.


முன்னேற்றம் கண்ட அஷ்வின்:


இதற்கிடையில், இந்த வெற்றியின்மூலம் அஷ்வின் மற்றும் ஷ்ரேயாஸ் ஜோடி ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மிகப்பெரிய மாற்றத்தை கண்டுள்ளனர். வங்கதேசத்திற்கு எதிரான 2வது டெஸ்டில் 6 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் பட்டியலில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ராவுடன் இணைந்து அஸ்வின் நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.


மேலும், பேட்ஸ்மென்களில் தரவரிசையில் அஷ்வின் 3 இடங்கள் முன்னேறி 84வது இடத்தைப் பிடித்தார். அதேபோல் ஆல்-ரவுண்டர்கள் பட்டியலில் (343) ரேட்டிங் புள்ளிகளைப் பெற்று அஷ்வின் இரண்டாவது இடத்திலும், ரவீந்திர ஜடேஜாவை (369) ரேட்டிங் புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளார். அதேபோல் ஷ்ரேயாஸ் ஐயரைப் பொறுத்தவரை பத்து இடங்கள் முன்னேறி 16வது இடத்தைப் பிடித்துள்ளார்.


தரவரிசை:


இதற்கிடையில், இளம் விக்கெட் கீப்பர்-பேட்டர் ரிஷப் பந்த் 3 தரவரிசைப் புள்ளிகளைப் பெற்று ஆறாவது இடத்திலும், வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 5 இடங்கள் முன்னேறி 33 வது இடத்திலும் முதலிடத்தில் உள்ளார். அணிகளின் தரவரிசையை கருத்தில் கொண்டு, இந்தியா தரவரிசையில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவை விட 15 புள்ளிகள் பின்தங்கி இரண்டாவது இடத்தில் உள்ளது.






பின்தங்கிய கோலி, புஜாரா:


வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் சேதேஷ்வர் புஜாரா மூன்று இடங்கள் சரிந்து 19வது இடத்தைப் பிடித்தார். அதேபோல், இந்திய அணியின் நட்சத்திட வீரர் விராட் கோலி இந்த தொடருக்குப் பிறகு 12வது இடத்தில் இருந்து 14வது இடத்துக்கு சென்றுள்ளார். அதாவது இரண்டு இடங்கள் சரிந்துள்ளார். ரோகித்சர்மா 9வது இடத்தில் உள்ளார். 


வங்கதேச அணியினரின் டெஸ்ட் ரேங்க்:


வங்கதேச வீரர் லிட்டன் தாஸ் 25 மற்றும் 73 ரன்களுடன் 12வது இடத்தைப் பிடித்துள்ளனர். மோமினுல் ஹக் (5 இடங்கள் முன்னேறி 68வது), ஜாகிர் ஹசன் (7 இடங்கள் முன்னேறி 70வது இடம்), நூருல் ஹசன் (5 இடங்கள் முன்னேறி 93வது இடம்) தரவரிசையிலும் முன்னேறியுள்ளன.


சுழற்பந்து வீச்சாளர்களான தைஜுல் இஸ்லாம் மற்றும் மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் தலா இரண்டு இடங்கள் முன்னேறி முறையே 28 மற்றும் 29 வது இடங்களையும், கேப்டன் ஷகிப் அல் ஹசன் ஒரு இடத்திற்கு முன்னேறி 32வது இடத்தைப் பிடித்துள்ளனர். தைஜுல் முதல் இன்னிங்ஸில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார், அதே நேரத்தில் மெஹிடி மற்றும் ஷாகிப் ஆகியோர் போட்டியில் தலா 6 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.