புதிய டி20 அணி:


டி20 உலகக் கோப்பை அரையிறுதி தோல்விக்கு பிறகு இந்திய டி20 அணியில் பல மாற்றங்களை செய்ய பி.சி.சி.ஐ. தொடர்ந்து திட்டமிட்டு வருகிறது. புதிய கேப்டன், புதிய பயிற்சியாளர் என டி20 அணிக்கு மட்டும் பல அதிரடி மாற்றங்கள் நிகழ இருக்கிறது. அதற்கான, முதல்படியாகதான் நேற்று அறிவிக்கப்பட்ட இலங்கை அணிக்கு எதிரான டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது.


அதேபோல், விரைவில் இந்திய டி20 அணிக்கான புதிய பயிற்சியாளர் தலைமையிலான இந்திய படை வருகின்ற ஜனவரி மாதத்தில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, இந்திய டி20 அணிக்கு புதிய கேப்டன் மற்றும் புதிய பயிற்சியாளரின் கீழ் இந்திய அணியினர் வருகிற ஜனவரி மாதம் இலங்கைக்கு எதிராக டி20 தொடரில் விளையாட இருக்கிறது. 


புதிய மாற்றம்:


இந்த இலங்கைக்கு எதிரான தொடருக்கு ஹர்திக் பாண்டியா, இந்திய டி20 அணியின் கேப்டனாக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார். அந்த வரிசையில் இந்திய டி20 அணிக்கு புதிய பயிற்சியாளரும் நியமிக்கப்பட பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


இந்திய அணியின் பயிற்சியாளராக தற்போது செயல்பட்டு வரும் ராகுல் டிராவிட், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு வழக்கம்போல் செயல்படுவார். அதேநேரத்தில் டி20 போட்டிகளுக்கு மட்டும் தனி பயிற்சியாளர் நியமிக்கப்பட இருக்கிறார். 


ஹர்திக் பாண்டியா டி20 கேப்டன்: இந்தியாவின் புதிய டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா ஜனவரியில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரின் மூலம் களமிறங்குகிறார். இதில் மிகப்பெரிய மாற்றம் என்னவென்றால், தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இனி இந்தியாவின் டி20 போட்டிகளில் இடம்பெற மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து, புவனேஷ்வர் குமார், ஆர்.அஷ்வின், முகமது ஷமி, தினேஷ் கார்த்திக் ஆகிய வீரர்களையும் டி20 அணியில் சேர்க்க பிசிசிஐ விரும்பவில்லை. 


தலைசிறந்த டி20 அணி:


இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில்,”வருகின்ற 2024ம் ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக் கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியை உருவாக்கு திட்டமிட்டுள்ளோம். எங்கள் முன்னணி வீரர்கள் சிலருக்கு 35-36 வயது ஆகிறது. அவர்கள் அணியில் நீண்டகாலம் ஆடுவதற்கான வாய்ப்பு இல்லை. இதன் காரணமாக நீங்கள் இப்போதே ஒரு அணியை தேர்ந்தெடுக்கவில்லை என்றால், பின்வரும் நாட்களில் அது சிரமத்தை அளிக்கும். சில சிறந்த வீரர்கள் இனி டி20யில் அணியின் இடம்பெற மாட்டீர்கள் என அவர்களுக்கே தெரிவித்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார். 


எந்த கிரிக்கெட் வீரர்கள் இனி டி20 போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள்? 



  • ரவிசந்திரன் அஷ்வின், முகமது ஷமி, தினேஷ் கார்த்திக், புவனேஷ்வர் குமார் ஆகியோர் இனி முற்றிலும் டி20 போட்டிகளில் பங்கேற்க மாட்டார்கள்.

  • ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் தற்போதுவரை ஆடும் பிளே லெவனில் இடம்பெறுவார்கள். விரைவில் அவர்களும் டி20 வடிவத்தில் இடம் பெறுவது குறைவுதான்.

  • மேலும், இந்தியாவில் வருங்கால டி20 திட்டங்களில் கேஎல் ராகுல் பொருந்த மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ரிஷப் பந்த் இலங்கை தொடருக்குத் தேர்வு செய்யப்படவில்லை, ஆனால் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அவர் தொடர்ந்து இருப்பார் 


இலங்கை தொடருக்கான இந்திய அணி மாற்றங்கள்: 


இலங்கை தொடருக்கான அணியில் சில அதிர்ச்சிகரமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பார்ம் அவுட் காரணமாக டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ரிஷப் பண்ட் நீக்கப்பட்டுள்ளார். மேலும், மூத்த வீரர் ஷிகர் தவானும் ஒருநாள் போட்டிகளில் இடம்பெறவில்லை. ஒருநாள் தொடரின் துணை கேப்டன் பதவியில் இருந்து கேஎல் ராகுல் நீக்கப்பட்டுள்ளார்.


அவருக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா புதிய துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ராகுல், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சிவம் மாவி மற்றும் முகேஷ் குமார் ஆகியோருடன் டி20 தொடரை இழக்கின்றனர். ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் பதவியில் இருந்து கேஎல் ராகுல் நீக்கப்பட்டார். 


இலங்கை எதிரான டி20 போட்டிக்கான இந்திய அணி:  ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் படேல். சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், சிவம் மாவி, முகேஷ் குமார்.


இலங்கை எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி:  ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப். யாதவ், அக்சர் படேல், முகமது ஷமி, முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்.