India Cricket Schedule 2023: 2023ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் அணி விளையாடவுள்ள போட்டித்தொடர்கள் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கைக்கு எதிரான தொடரில் தொடங்கி, ஆசிய கோப்பை போட்டி, உலகக்கோப்பை போட்டி என மாபெரும் கிரிக்கெட் விருந்தினை இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு அளிக்கவுள்ளது. அது குறித்து கீழே காணலாம்.
ஜனவரி - பிப்ரவரி
ஜனவரி மாதம் 3ஆம் தேதியில் இருந்து 15ஆம் தேதிக்கு இடைப்பட்ட தேதிகளில் இலங்கைக்கு எதிராக இந்திய அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.
அதன் பின்னர் ஜனவரி மாதத்தின் இறுதியிலும், பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்திலும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது. ஆனால் இந்த தொடரில், டி20 போட்டிகளும், டெஸ்ட் போட்டிகளும் சேர்க்க வாய்ப்புள்ளது. இந்த இரண்டு தொடர்களும் இந்தியாவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
மார்ச் - ஜூன் ( ஐ.பி.எல்)
மார்ச் முதல் ஜீன் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் 16வது ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ளது. மொத்தம் 74 போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
ஆகஸ்ட் - செப்டம்பர் (ஆசிய கோப்பை)
ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் மாதத்தின் தொடக்கம் அல்லது இடையில் வரை ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது. மேலும் இந்த தொடர் 50 ஓவர் கிரிக்கெட் தொடராக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொடர் பாகிஸ்தான் அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும்.
அக்டோபர் - நவம்பர் (உலகக்கோப்பை)
அக்டோபட் மற்றும் நவம்பர் மாதத்தில் ஐசிசி உலகக்கோப்பையை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த உலகக்கோப்பை தொடரும் இந்தியாவில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல், ஆசிய கோப்பை, உலகக்கோப்பை என இந்திய அணிக்கும் வீரர்களுக்கும் மிகவும் முக்கியமான ஆண்டாக 2023 அமையவுள்ளது.