”ரிஷப் பண்டுக்கு நான் சொல்வதெல்லாம் அவர் ஒரு சிறந்த வீரர் என்பது தான். அவரது விபத்தைப் பற்றி கேள்விப்பட்டபோது என் கண்களில் கண்ணீர் வந்தது” என்று ரவி சாஸ்திரி கூறினார்.


மூன்று கேட்சுகளை பிடித்து அசத்திய ரிஷப் பண்ட்:


ஐசிசி டி20 உலகக் கோப்பை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று (ஜூன் 9) நடைபெற்ற 19 வது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. முன்னதாக இந்த ஆட்டத்தில் வெற்றிபுறும் சூழலில் விளையாடிய பாகிஸ்தான் அணியை தங்களது பந்து வீச்சின் மூலம் கதி கலங்க வைத்தனர் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள்.


குறிப்பாக இந்திய அணியின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரித் பும்ரா பந்து வீச்சில் கலக்கினார் என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக 4 ஓவர்கள் வீசிய அவர் 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.


அதேநேரம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். அதேபோல், இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்ட ரிஷப் பண்ட் மூன்று கேட்சுகளை வீழ்த்தி அசத்தினார். இச்சூழலில் தான் கடந்த ஆண்டு விபத்தில் பாதிக்கப்பட்டு பின்னர் 16 மாதங்கள் கழித்து இந்திய அணிக்கு விளையாடி வருகிறார். நேற்றைய போட்டியில் பேட்டிங்கிலும் 42 ரன்களை எடுத்தார். பல்வேறு தரப்பினரும் அவரை பாராட்டி வருகின்றனர்.


அதேபோல் போட்டி முடிந்த பிறகு ரிஷப் பண்டுக்கு இந்திய அணியின் சிறந்த பந்து வீச்சாளர் விருதை பீல்டிங் பயிற்சியாளர் டி திலீப்பால் வழங்கினார். இதில் சிறப்பு விருந்தினரக பங்கேற்ற ரவி சாஸ்திரி  கண்கலங்கினார்.


கண்கலங்கிய ரவி சாஸ்திரி:


இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பின்னர் ரவி சாஸ்திரி பேசினார். இது தொடர்பாக அவர் பேசுகையில், “ரிஷப் பண்டுக்கு நான் சொல்வதெல்லாம் அவர் ஒரு சிறந்த வீரர் என்பது தான். அவரது விபத்தைப் பற்றி கேள்விப்பட்டபோது என் கண்களில் கண்ணீர் வந்தது.


மருத்துவமனையில் அவரைப் பார்த்தபோது, ​​​​அது மோசமாக இருந்தது. பின்னர் அவர் அங்கிருந்து திரும்பி வந்து இந்திய அணியில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். மிகப்பெரிய ஆட்டங்களில் ஒன்றான இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் விளையாடுவது மனதைக் கவரும் வகையில் உள்ளது” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “பேட்டிங்கில் உன்னுடைய திறமை என்ன என்பது எல்லோருக்கும் தெரியும்.


ஆனால், ஆபரேஷன் முடிந்து விரைவாக மீண்டு வந்த உனது விக்கெட் கீப்பிங் மற்றும் மூவ்மென்ட் நீ எவ்வளவு கடினமாக உழைத்தாய் என்பதற்கான சாட்சி. உங்களைப் பொறுத்தவரை, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு இது ஒரு உத்வேகம், நீங்கள் ஒரு வெற்றியைப் பெறலாம். நன்றாக விளையாடுங்கள்” என்று இந்திய அணியையும் வாழ்த்தினார் ரவி சாஸ்திரி.


மேலும் படிக்க: IND vs PAK: "ஜெயிக்க வைக்க முடியலயே" மைதானத்திலே கண்ணீர் விட்ட பாகிஸ்தான் பவுலர்!


மேலும் படிக்க: T20 WC 2024: அடுத்தடுத்து தோல்வி! சூப்பர் 8 சுற்றுக்கு பாகிஸ்தான் முன்னேற முடியுமா? ஓர் அலசல்..