சவுராஷ்டிரா மற்றும் ஆந்திரா ரஞ்சி டிராபி போட்டியில் இந்தியாவின் முதல் தர கிரிக்கெட்டில் புஜாரா 12 ஆயிரம் ரன்களை கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
ஆந்திரா மற்றும் சவுராஷ்டிரா அணிகளுக்கு இடையிலான ரஞ்சி கோப்பை தொடர் இன்று முடிவுக்கு வந்தது. இந்த போட்டியின் தொடக்கத்தில் முதலில் டாஸ் வென்ற ஆந்திரா அணியின் கேப்டன் விகாரி பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆந்திரா 415 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து களமிறங்கிய சவுராஷ்டிரா 237 ரன்களுக்குள் தனது முதல் இன்னிங்ஸை முடித்து கொண்டது. அடுத்ததாக இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆந்திரா 164 ரன்கள் அடித்து டிக்ளர் செய்தது.
இதையடுத்து, 343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சவுராஷ்டிரா அணியின் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்களை இழக்க தொடங்கினர். ஒரு புறம் விக்கெட்கள் இழந்தாலும், மறுபுறம் நங்கூரமாய் நின்ற இந்திய அணி வீரர் புஜாரா 91 ரன்கள் குவித்து அவுட்டாகி சதத்தை இழந்தார்.
இதையடுத்து, 192 ரன்களுக்குள் சவுராஷ்டிரா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன்மூலம், ஆந்திரா அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்தநிலையில் சவுராஷ்டிரா அணிக்காக புஜாரா பேட்டிங் செய்தபோது 12,000 ரன்களை கடந்து அசத்தினார். இந்த சாதனையை அவர் தனது 145 வது போட்டியில் 60 சராசரியுடன் எட்டியுள்ளார். ஒட்டுமொத்தமாக, புஜாரா 240 முதல் தர போட்டிகளில் விளையாடி 18,000 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார்.
அதேபோல், இந்தியாவுக்காக புஜாரா 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 44.39 சராசரியுரன் 7014 ரன்கள் அடித்துள்ளார்.
புஜாராவின் 56 முதல் தர சதங்களில் 36 சதங்கள் இந்தியாவில் அடிக்கப்பட்டவை. மேலும், 48 அரைசதங்களையும் இந்தியாவில் அடித்துள்ளார். 14 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்து முன்னாள் இந்திய அணியின் தொடக்க வீரர் முதலிடத்தில் உள்ளார்.
இந்திய உள்நாட்டு தொடரில் அதிக ரன்கள் அடித்தவர்கள்:
வீரர்கள் | போட்டிகள் | ரன்கள் | சராசரி | அதிகப்பட்ச ரன்கள் | சதங்கள் |
வாசிம் ஜாபர் | 186 | 14609 | 53.70 | 301 | 46 |
புஜாரா | 146 | 12016 | 59.19 | 352 | 36 |
சச்சின் டெண்டுல்கர் | 118 | 9677 | 57.6 | 233* | 33 |
கவுதம் காம்பீர் | 126 | 9655 | 49.51 | 233* | 28 |
பார்தீவ் படேல் | 153 | 9500 | 44.18 | 206 | 23 |
அபினவ் முகுந்த் | 129 | 9398 | 50.52 | 300* | 30 |
மனோஜ் திவாரி | 129 | 9326 | 50.41 | 303* | 29 |
பத்ரிநாத் | 127 | 9127 | 54.65 | 250 | 28 |
பராஷ் டோக்ரா | 125 | 9078 | 51.57 | 253 | 30 |
உத்தப்பா | 133 | 9061 | 41.37 | 162 | 22 |
அதிக டெஸ்ட் ரன்களை அடித்த எட்டாவது இந்திய பேட்ஸ்மேன்:
இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் புஜாரா 8வது இடத்தில் இருக்கிறார்.
- முதல் இடம் - சச்சின் டெண்டுல்கர் (15,921)
- இரண்டாம் இடம் - டிராவிட் (13,265)
- மூன்றாம் இடம் - கவாஸ்கர் (10,122)
- நான்காம் இடம் - லக்ஷ்மனன் (8,781)
- 5ம் இடம் - சேவாக் (8,503)
- 6ம் இடம் - விராட் கோலி (80,94)
- 7வது இடம் - கங்குலி (7,212)
- 8வது இடம் - புஜாரா (7,014)