இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தற்போதைய பயிற்சியாளருமான டிராவிட்டின் இளைய மகன் அன்வே டிராவிட்க்கு உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடக U 14 அணியின் கேப்டனாக அன்வே டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார். ராகுல் டிராவிட்டை போலவே, அன்வே டிராவிட்டும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான தன்னை நிரூபணம் செய்துள்ளார். அன்வே டிராவிட்டும் அவரது தந்தையை போலவே அமைதியான குணம் மற்றும் ஆக்ரோஷமான ஆட்டத்தால் தற்போது அன்வாய் டிராவிட் கர்நாட்க அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 






அன்வே டிராவிட் மட்டுமல்ல, அவரது மூத்த சகோதரர் சமித் டிராவிட்டும் ஒரு கிரிக்கெட் வீரர். சமித் டிராவிட் 2019-20 சீசனில் கர்நாடக U 14 அணிக்காக விளையாடி இரண்டு இரட்டை சதங்களை அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமித் மற்றும் அன்வே இருவரும் வருங்கால இந்திய அணியின் தூண்களாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 


டிராவிட், 1996ஆம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக களமிறங்கினார். இதுவரை விளையாடிய 164 டெஸ்ட் போட்டிகளில் 36 சதங்கள் மற்றும் 63 அரைசதங்கள் அடித்துள்ளார். அத்துடன் 13,288 ரன்கள் எடுத்துள்ளார். பின்னர் அதே ஆண்டு அவர் சிங்கப்பூரில் இலங்கைக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டியிலும் களமிறங்கினார். இதுவரை அவர் விளையாடிய 344 ஒருநாள் போட்டிகளில் 12 சதங்கள் மற்றும் 83 அரைசதங்கள் ஆகும். மேலும் அத்துடன் 10,889 ரன்களை குவித்துள்ளார்.


டிராவிட் கடந்த 2012ஆம் ஆண்டில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.






ராகுல் டிராவிட்டின் சாதனைகள்: 



  1. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 210 கேட்சுகள் பிடித்து, டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்சுகள் எடுத்தவர் என்ற சாதனையை ராகுல் டிராவிட் படைத்துள்ளார்.

  2. தொடர்ந்து நான்கு இன்னிங்ஸ்களில் சதம் அடித்த ஒரே இந்திய டெஸ்ட் பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட்தான். ஆகஸ்ட் 8, 2002 முதல் அக்டோபர் 9, 2002 வரை இங்கிலாந்துக்கு எதிராக 3 சதங்கள் மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஒரு சதம் அடித்த போது டிராவிட் இந்த சாதனையைப் படைத்தார்.

  3. குறைந்த டெஸ்ட்டில் அதிவேகமாக 9000 ரன்களை எட்டிய இரண்டாவது வீரர் ராகுல் டிராவிட். இவர் 103 டெஸ்ட் போட்டிகளில் 9000 ரன்களை எட்டினார். அதன்பிறகு, கடந்த 2011 ம் ஆண்டு 103 டெஸ்ட்களில் குமார் சங்கக்கார 9000 ரன்களை எடுத்து டிராவிட்டின் சாதனையை முறியடித்தார்.

  4. 13,288 ரன்களுடன், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர்களில் டிராவிட் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

  5. சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஸ்டீவ் வாக் ஆகியோருடன், 90 ரன்களுக்கு மேல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்டமிழந்தவர் என்ற சாதனையை ராகுல் டிராவிட் இணைத்துள்ளார். இந்த மூன்று பேட்ஸ்மேன்களும் 90 ரன்களுக்கு மேல் 100 ரன்களுக்குள் 10 முறை ஆட்டமிழந்துள்ளனர்.