மயங்க் அகர்வால் சமீபத்திய உடல்நல பாதிப்பில் இருந்து மீண்டு வந்துள்ளார். இவர் வரும் வெள்ளிக்கிழமை முதல் அதாவது பிப்ரவரி 9ஆம் தேதி முதல் சென்னையில் நடைபெறும் அடுத்த ரஞ்சி டிராபி குரூப் சி போட்டியில் தமிழ்நாடுக்கு எதிராக கர்நாடகாவை வழிநடத்தவுள்ளார்.
கர்நாடக அணி கேப்டன் மயங்க், ரஞ்சி போட்டியில் விளையாட்டிவிட்டு அகர்தலாவில் இருந்து கடந்த ஜனவரி 30ஆம் தேதி திரும்பிக் கொண்டிருந்தபோது, விமான நிலையத்தில் விமானத்தில் ஏறியவுடன், அவருக்கு வாய் மற்றும் தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. இதை விமானத்தில் இருந்த அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார் மயங்க் அகர்வால். இதையடுத்து, மயங்க் உடனடியாக அகர்தலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மயங்கை சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தற்போது எந்த வித ஆபத்தும் இல்லை என்றும், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
திரிபுராவுக்கு எதிரான போட்டிக்குப் பிறகு, சூரத் செல்லும் விமானத்தில் பயனத்தை தொடங்குவதற்கு முன்னர் நீர் போன்ற ஏதோ ஒரு திரவத்தை அருந்தியுள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக ரயில்வேக்கு எதிரான கர்நாடகாவின் கடைசி போட்டியை மயங்க் அகர்வால் தவறவிட்டார். இருப்பினும், இங்கு மருத்துவ பரிசோதனையின் போது அவருக்கு எந்த பெரிய மருத்துவ ஆபத்துகளும் இல்லை எனக் கூறியது மட்டும் இல்லாமல், அவர் மீண்டும் அணிக்கு திரும்புவதற்கு நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக உள்ளார் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் நாளை முதல் மயங்க் அகர்வால் பயிற்சியில் ஈடுபடுவார் என கூறப்படுகின்றது.
மயங்க் அகர்வால் உடல்நல பாதிப்பினால் மருத்துவமனையில் இருந்தபோது, பேட்டர் நிகின் ஜோஸ், ரயில்வேக்கு எதிராக கர்நாடகாவை வழிநடத்தினார். சூரத்தில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சீனியர் வீரர் மணீஷ் பாண்டே ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்து அணியை வெற்றி பெறவைத்தார்.
தற்போது, குரூப் சி பிரிவில் கர்நாடககா மற்றும் தமிழ்நாடு 21 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளன. ஆனால் கர்நாடகா அணி ந் அவர்களின் சிறந்த நிகர நெட் ரன்ரேட் 2.06 இருக்கும் காரணத்தால் தரவரிசையில் முன்னணியில் உள்ளது.
கர்நாடக தொடக்க ஆட்டக்காரராக இருக்கும் அகர்வால் இதுவரை நான்கு போட்டிகளில் 44 சராசரியில் இரு சதங்கள் மற்றும் ஒரு அரைசதத்துடன் 310 ரன்கள் எடுத்திருப்பதால் அகர்வாலின் வருகை கர்நாடகா அணியின் பேட்டிங் வரிசையை மேலும் பலப்படுத்தும் எனக் கூறலாம்.
ஃபார்மில் உள்ள தேவ்தத் படிக்கலும் தமிழ்நாடுக்கு எதிரான ஆட்டத்தில் தேர்வு செய்யப்படுவதால், கர்நாடகா பேட்டிங்கில் மேலும் அதிக பலத்துடன் களமிறங்கவுள்ளது. தேவ்தத் படிக்கல் மூன்று போட்டிகளில், இடது கை ஆட்டக்காரர் இரண்டு சதங்களுடன் 92.25 சராசரியில் 369 ரன்கள் குவித்துள்ளார்.
தமிழ்நாடு அணிக்கு எதிரான கர்நாடக அணி: மயங்க் அகர்வால் (கேப்டன்), நிகின் ஜோஸ் (துணை கேப்டன்), தேவ்தத் பாடிக்கல், சமர்த் ஆர், மணீஷ் பாண்டே, ஷரத் ஸ்ரீனிவாஸ் (விக்கெட் கீப்பர்), அனீஷ் கேவி, வைஷாக் விஜய்குமார், வாசுகி கௌஷிக், ஷஷிகுமார் கே, சுஜய் சத்தேரி (விக்கெட் கீப்பர்), வித்வத் கவேரப்பா, வெங்கடேஷ் எம், கிஷன் எஸ் பெதரே, ரோஹித் குமார் ஏசி, ஹர்திக் ராஜ்.