முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அபே குருவில்லா, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) பொது மேலாளராக நியமிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் தேசிய தேர்வுக் குழு உறுப்பினராக பதவி வகித்து வந்தநிலையில், சில மாதங்களுக்கு முன்பு தீரஜ் மல்ஹோத்ரா ராஜினாமா செய்த பிறகு பிசிசிஐ ஜிஎம் பதவி காலியாக இருந்தது.


இந்தநிலையில் 53 வயதான அபே குருவில்லா பொது மேலாளராக நியமிக்கப்பட்டார். அவர் இந்திய அணிக்காக இதுவரை 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும், குருவில்லாவிற்கு புதிய பொறுப்பு வழங்க உச்ச கவுன்சில் (நேற்று) புதன்கிழமை முடிவு செய்தது.


இதுகுறித்த தகவலை ani தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 






பிசிசிஐ சார்பில் நடத்தப்பட இருக்கும் பெரிய தொடர்கள் :


கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கர்னல் சி.கே.நாயுடு டிராபி மார்ச் 15 முதல் மே 1 வரை நடைபெறும், அதே சமயம் சீனியர் மகளிர் டி20 லீக் ஏப்ரல் 15 ஆம் தேதி தொடங்குகிறது மற்றும் இறுதிப் போட்டி மே 12 ஆம் தேதி நடைபெறும். இருப்பினும், கூச் பெஹர் டிராபி குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. 


நடந்த ஐபிஎல் தொடர், நடக்காத டி20 சாலஞ்ச் : 


கொரோனா பரவல் அதிகமாக இருந்த காரணத்தால், 2021-ம் ஆண்டு நடக்க இருந்த மகளிர் டி20 சாலஞ்ச் தொடர் நடத்தப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், கொரோனா பொருந்தொற்று காலத்திலும் இரண்டு கட்டங்களாக ஐபிஎல் தொடர் நடத்தி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


2021 சீசன் வரை 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில், 2022 சீசன் முதல் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. இந்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வான்கடே, டி.ஒய் பட்டீல் கைதானம், சிசிஐ எனப்படும் கிரிக்கெட் க்ளப் ஆஃப் இந்தியா, மற்றும் பூனே கிரிக்கெட் மைதானம் ஆகிய இடங்களில் வைத்து நடத்தப்படும் என தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரசிகர்களுக்கு அனுமதி இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண