பிரபல கிரிக்கெட் வீரர்களில் குழந்தைகள் எந்த காலக்கட்டத்திலும் உள்நாட்டு அல்லது சர்வதேச கிரிக்கெட் வீரராக ஜொலிப்பது கடினம். முன்னதாக, கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் மகன் ரோஹன் கவாஸ்கர், ரோஜர் பின்னி மகன் ஸ்டூவர்ட் பின்னி, ஸ்ரீகாந்த் மகன் அனிருதா ஸ்ரீகாந்த் உள்பட பல வீரர்களில் மகன்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளில் பெரிதளவில் ஜோபிக்கவில்லை. 


ஆனால், விளையாட்டின் மீதான காதல் எப்படியும் இவர்கள் விளையாடுவதை தடுக்கவில்லை. அந்த வகையில் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மகன் சமித் டிராவிட்டின் சமீபத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


வைரல் வீடியோ:


முன்னாள் புகழ்பெற்ற பேட்ஸ்மேனும், இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய தலைமை பயிற்சியாளருமான ராகுல் டிராவிட் தனது அற்புதமான ஆட்டத்திற்காக உலகம் முழுவதும் அறியப்பட்டவர். இப்போது அவரது மகன் சமித் தனது தந்தையின் பாணியை கிரிக்கெட்டில் பின்பற்றி வருகிறார். இப்படியான சூழ்நிலையில், சமித் பிசிசிஐ நடத்தும் 19 வயதுக்குட்பட்ட கூச் பெஹர் டிராபியில் விளையாடி வருகிறார். இந்தப் போட்டியில் கர்நாடக அணிக்காக விளையாடி வரும் சமித், ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 98 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு பங்களித்தார். 


ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சமித் 159 பந்துகளில் 13 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 98 ரன்கள் எடுத்தார். சமித் சதத்தை தவறவிட்டாலும். ஜம்மு காஷ்மீரில் உள்ள ஹாஸ்டல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கர்நாடகா அணி அபார வெற்றி பெற்றது. 






போட்டியை நடத்தும் ஜம்மு & காஷ்மீர் அணி இன்னிங்ஸ் மற்றும் 130 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜம்மு காஷ்மீர் அணி 170 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாட வந்த கர்நாடகா அணி 5 விக்கெட்டுக்கு 480 ரன்கள் எடுத்து இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பின்னர் இரண்டாவது இன்னிங்சுக்கு வந்த ஜம்மு காஷ்மீர் அணி 130 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் அணியை ஒரே இன்னிங்சில் 130 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகா வீழ்த்தியது. 


சமித்தின் பேட்டிங்: 


சமித்தின் பேட்டிங் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் நிலையில், சில மிக அழகான ஷாட்களை விளையாடுவதைக் காணலாம். பேட்டிங்கில் சமித்தின் ஸ்டைல் ​​மிகவும் உன்னதமாகவும், விவேகமாகவும் நிதானமாகவும் விளையாடி வருகிறார்.


மேலும், சமித் மிகவேக பந்து வீச்சாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் ஜம்மு& காஷ்மீருக்கு எதிரான போட்டியில் மூன்று விக்கெட்டுகளை எடுத்திருந்தார். 




முன்னதாக, சமித்தின் தந்தை ராகுல் டிராவிட், தேசிய பணியில் இருந்து ஓய்வு நேரத்தில், கூச் பெஹார் டிராபியில் (கர்நாடகா vs உத்தரகாண்ட்) போட்டியில் தன் மகன் விளையாடியதை கண்டுகளித்தார். தற்போது ராகுல் டிராவிட், தென்னாப்பிரிக்கா சுற்றுபயணத்தில் இருந்து வருகிறார்.