டிராவிட் மகனுக்கு இந்திய அணியில் இடம்:
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், தலைமைப் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டின் மகன் சமித் டிராவிட் , ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பல வடிவத் தொடருக்கான இந்திய 19 வயதுக்குட்பட்ட அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். செப்டம்பர் 21, 23 மற்றும் 26 ஆகிய தேதிகளில் புதுச்சேரியில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய 19 வயதுக்குட்பட்ட அணி விளையாடுகிறது. இதில்உத்தரபிரதேசத்தின் முகமது அமான் கேப்டனாக இருந்து அணியை வழி நடத்த உள்ளார்.
அதேபோல் செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 7 ஆகிய தேதிகளில் தொடங்கும் டெஸ்ட் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணிக்கு மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சோஹம் பட்வர்தன் கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான சமித் டிராவிட் தற்போது பெங்களூருவில் நடைபெற்று வரும் KSCA மகாராஜா T20 கோப்பையில் மைசூர் வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். மகராஜா டிராபியில் இதுவரை 7 இன்னிங்ஸ்கள் விளையாடி உள்ள இவர் 82 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகப்ட்சமாக 33 ரன்கள் எடுத்துள்ளார். 7 இன்னிங்ஸ்கள் விளையாடி வெறும் 82 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள சமித் டிராவிட்டிற்கு இந்திய அணியில் இடம் கிடைத்ததை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். திறமை உள்ள பலருக்கு வாய்ப்பு வழங்காமல் வாரிசுகளுக்கு வாய்ப்பு எளிமையாக கிடைக்கிறது என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
இந்திய U-19 அணி ஒரு நாள் அணி:
ருத்ரா படேல், சாஹில் பராக், கார்த்திகேயா கேபி, முகமது அமான் (கேப்டன்), கிரண் சோர்மலே, அபிக்யான் குண்டு (WK), ஹர்வன்ஷ் சிங் பங்கலியா (WK), சமித் டிராவிட், யுதாஜித் குஹா, சமர்த் என், நிகில் குமார், சேத்தன் சர்மா, ஹர்திக் ராஜ், ரோஹித் ரஜாவத், முகமது எனான்.
டெஸ்ட் தொடருக்கான இந்திய U19 அணி:
வைபவ் சூர்யவன்ஷி, நித்யா பாண்டியா, விஹான் மல்ஹோத்ரா, சோஹம் பட்வர்தன் (கேப்டன்), கார்த்திகேயா கேபி, சமித் டிராவிட், அபிக்யான் குண்டு (WK), ஹர்வன்ஷ் சிங் பங்கலியா (WK), சேத்தன் சர்மா, சமர்த் என், ஆதித்யா ராவத், நிகில் குமார், அன்மோல்ஜீத் சிங், ஆதித்யா சிங், முகமது எனான்.