சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணி:


கடந்த ஜூன் 29 ஆம் தேதி நடைபெற்ற டி20  உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை 2 வது முறையாக வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது சூர்யகுமார் யாதவ் பிடித்த டேவிட் மில்லரின் கேட்ச் தான்.


வீடியோவை பகிர்ந்த மோடி:


இந்த கேட்ச் தான் ஆட்டத்தில் திருப்பு முனையாக அமைந்தது.  இந்நிலையில் நேற்று நாடு திரும்பிய இந்திய அணி வீரர்கள் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதனைத்தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாள ராகுல் டிராவிட் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியுடன் உரையாடினார்கள். இது தொடர்பான வீடியோ காட்சிகளை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 5) தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.


160க்கும் மேற்பட்ட முறை கேட்சுகளை பிடித்து பயிற்சி:


இதில் சூர்யகுமார் யாதவ் பிடித்த வரலாற்று சிறப்பு மிக்க கேட்ச் பற்றி இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பேசியுள்ளார். அவர் பேசுகையில், “இது போன்ற கேட்சுகளை பிடிக்க தீவிரமான பயிற்சியை சூர்யகுமார் யாதவ் மேற்கொண்டார். இறுதிப் போட்டிக்கு முன்னதாக 150 முதல் 160 கேட்சுகளுக்கும் மேல் பிடித்து பயிற்சி எடுத்தார்” என்று கூறினார்.






கடவுள் தந்த வாய்ப்பு:


இதனிடையே சூர்யகுமார் யாதவ் பேசுகையில், “போட்டியின் தொடக்கத்தில் இருந்தும், அதற்கு முன்பும் ஐபிஎல் முடிந்து திரும்பும் போது, ​​இதுபோன்ற கேட்சுகளை நான் பயிற்சி செய்தேன். ஆனால், இறுதிப் போட்டியில் கடவுள் எனக்கு இப்படியொரு வாய்ப்பைத் தருவார் என்று அப்போது எனக்குத் தெரியாது. "ஆனால் நான் இதற்கு முன்பு இதுபோன்ற கேட்சுகளை பயிற்சி செய்தேன், இது சூழ்நிலை வரும்போது அமைதியாக இருக்க உதவியது" என்று சூர்யகுமார் பிரதமர் மோடியிடம் கூறினார். 


மேலும் படிக்க: Hardik Pandya: ”கம்பேக்னா இப்படி இருக்கனும்” - வான்கடேவில் முழங்கிய ஒற்றை பெயர் - திகைத்துப் போன ஹர்திக் பாண்ட்யா


மேலும் படிக்க: Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!