இந்திய அணி இரண்டு டெஸ்ட், மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளை விளையாட வெஸ்ட் இண்டீஸுக்கு கடந்த மாதம் சுற்றுபயணம் சென்றது. இதில் முதலில் நடந்த டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. அதுமட்டுமின்றி, அந்த போட்டியில் இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அவர் அறிமுகமான முதல் டெஸ்ட் போட்டியிலே சதம் அடித்து சாதனை படைத்தார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டிலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி தனது 76வது சதத்தை அடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்தார். இருப்பினும் அந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டு ஆட்டம் நிறுத்தப்பட்டதால், மேட்ச் டிராவில் முடிந்தது. இருப்பினும் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்த இந்தியா
ஜூலை 27 ஆம் தேதி, முதல் ஒருநாள் போட்டி வெஸ்ட் இண்டீஸ்-இந்தியா அணி மோதியது. இந்த போட்டியில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து 114 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக ஆடி 22.5 ஓவரில் வெற்றி பெற்றது.
நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் முன்னனி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா பிளேயிங் 11னில் இடம்பெறவில்லை. முற்றிலும் இளம் வீரர்களை களத்தில் இறக்கிவிட்டு விளையாட வைத்தது இந்தியா. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய இந்தியா 40.5 ஓவர்களுக்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை வெஸ்ட் இண்டீஸ் அணி எளிமையாக வென்றது. விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இல்லாததே தோல்விக்கு காரணம் என்று அனைவரும் கூறத்தொடங்கினார்
விளக்கம் கொடுத்த தலைமை பயிர்ச்சியாளர் ராகுல் டிராவிட்
விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா இல்லாததே தோல்விக்கு காரணம் என்று கூறியவர்களுக்கு விளக்கம் கொடுத்த ராகுல் டிராவிட்-”ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை என இரு முக்கியமான தொடர்கள் அடுத்தடுத்து வருகிறது. அதற்கு முன்னர் இளம் வீரர்களை பரிசோதித்து பார்க்க இந்த தொடரே எங்களுக்கு கடைசி வாய்ப்பு. காயமடைந்த முன்னணி வீரர்கள் உடல்தகுதியை எட்டுவதற்கான பயிற்சியை தேசிய கிரிக்கெட் அகாடமியில் மேற்கொண்டுள்ளனர்.அ வர்கள் முழுமையாக குணமடைந்து அணிக்கு திரும்பிவிட்டால் பிரச்சினை இல்லை. ஒருவேளை ஆசிய கோப்பைக்கு முன்பாக உடல் தகுதியை எட்டாவிட்டால் என்ன செய்வது ? எனவே அவர்களுக்கு பதிலாக சரியான மாற்று வீரர்களை அடையாளம் காண்பதற்கே சில வீரகளுக்கு வாய்ப்பு அளித்து பரிசோதிக்கிறோம். அதேபோல் இது போன்ற தொடர்களில் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா விளையாட வேண்டும் என்பது கட்டாயம் இல்லை. அவர்கள் இடம் பெற்றால் இளம் வீரகளுக்கு வாய்ப்பு அளிக்க முடியாததாலையே அவர்களுக்கு ஓய்வு கொடுத்தோம்” என்று கூறினார்