இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான ஆஷஸ் 2023 தொடரின் 5வது டெஸ்ட் போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. விக்கெட் இழப்பின்றி 136 ரன்கள் எடுத்துள்ள ஆஸ்திரேலிய அணி, வெற்றிக்கு இன்னும் 248 ரன்கள் எடுக்க வேண்டும். இந்தநிலையில், 5வது டெஸ்டில், ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே, இங்கிலாந்து ரசிகருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


ஆஷஸ் தொடரின் 5வது டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டம் முடிந்து ஆஸ்திரேலிய வீரர்கள் டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்று கொண்டிருந்தபோது, பார்வையாளர்கள் இடத்தில் இருந்த இங்கிலாந்து அணியின் ரசிகர் ஒருவர் அவர்களை கிண்டல் செய்துள்ளார். அப்போது தனது அறைக்கு சென்று கொண்டிருந்த மார்னஸ் லாபுசாக்னே, கோபமடைந்து அந்த ரசிகரிடம் மோதினார். 






அவரை பின்தொடர்ந்து வந்த உஸ்மான் கவாஜா, லாபுசாக்னேவை சமாதானம் செய்து டிரஸ்ஸிங் ரூம் நோக்கி அழைத்து சென்றார். அந்த வீடியோவில், “ இங்கிலாந்து ரசிகர் எரிச்சலூட்டும் வகையில் கிண்டல் செய்தபோது, உடனே திரும்பி வந்த லாபுசாக்னே அவரிடம் என்ன சொன்னீர்கள் என்று கேட்டார். அவரது கோபத்தைப் பார்த்த ரசிகர் உடனடியாக மன்னிப்பு கேட்டாலும் லாபுஷேனின் கோபம் சிறிதும் குறையவில்லை.


போட்டி சுருக்கம்: 


ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 283 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 295 ரன்கள் எடுத்தது. 


தொடர்ந்து, இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 395 ரன்கள் எடுத்தது. இப்போது அனைவரின் பார்வையும் 5-வது நாள் ஆட்டத்தின் மீதே உள்ளது, அங்கு மழை தொந்தரவு செய்யாவிட்டால் முடிவை முழுமையாக எதிர்பார்க்கலாம். 384 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நான்காம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 135 ரன்கள் எடுத்திருந்தது. உஸ்மான் கவாஜா 69 ரன்களுடனும், டேவிட் வார்னர் 58 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.