இந்தியா மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இடதுகை சுழற்பந்து வீச்சாளராக அறிமுகமாகியிருக்கும் ரச்சின் ரவீந்திரா அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். நியூசிலாந்து அணியில் இந்திய வம்சாவளி கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் விளையாடுவது இது முதன்முறை அல்ல. தீபக் பட்டேல், இஷ் ஷோதி, ஜிதன் பட்டேல் போன்ற கிரிக்கேட் வீரர்கள் வரிசையில் தற்போது ரச்சின் ரவீந்திராவும் இடம் பிடித்துள்ளார். 


ரச்சினின் அப்பா ரவீந்தரன் சாப்ஃட்வேர் இன்ஜினியராகப் பணியாற்றியவர். 90களில் நியூசிலாந்துக்குக் குடிபெயர்ந்தார்.  தீவிர கிரிக்கெட் ரசிகரான இவர்தான் தனது மகனுக்கு ரச்சின் எனப் பெயர் வைத்துள்ளார்.இதற்குக் காரணம் என்ன தெரியுமா? ரவீந்திரன் தீவிர ராகுல் டிராவிட் மற்றும் சச்சின் டெண்டுல்கர் விசிறி. அதனால் ராகுல் ட்ராவிட்டின் முதல் எழுத்தையும் சச்சினின் பின்பாதி பெயரையும் சேர்த்து ரச்சின் எனப் பெயரிட்டுள்ளார்.





 ரச்சின் 2016ல் நியூசிலாந்தின் 19 வயதுக்குக் கீழானவர்களுக்கான அணியிலும் இந்தியாவுக்கு எதிராக விளையாடியுள்ளார். ஐந்து வருடங்கள் கழித்து தற்போது அவர் இந்திய அணிக்கு எதிராக விளையாடி வருகிறார்.  நியூசிலாந்து அணி அண்மையில் அவரை ப்ளாக் கேப் கொடுத்து வரவேற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 


கூடுதல் தகவலுக்கு, ரச்சினுக்கு ப்ரெமிளா என்கிற கேர்ள் பிரெண்டும் இருக்கிறார்.