இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரஹானே, பேட்டிங் தேர்வு செய்தார். போட்டி நடைபெறுவதற்கு முன்பே,  முதல் டெஸ்ட் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் அறிமுகமாக இருப்பதாக இந்திய டெஸ்ட் அணியின் தற்காலிக கேப்டன் ரஹானே தெரிவித்திருந்தார். அதன்படி, இந்திய அணியில் அறிமுகமாகும் 303 வது வீரர் என்ற பெருமையை ஷ்ரேயாஸ் ஐயர் பெற்றார். 


ஓப்பனிங் களமிறங்கிய மயாங்க் பெரிதாக சோபிக்கவில்லை. சிறப்பாக ஆடிய மற்றொரு ஓப்பனரான கில், அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவரை அடுத்து பேட்டிங் செய்த புஜாரா, ரஹானா ஆகியோரும் ஏமாற்றம் அளித்த நிலையில் அறிமுக போட்டியில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதம் கடந்து அடித்து கொண்டிருக்கிறார். 94 பந்துகளில் அரை சதம் கடந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு, கிரிக்கெட் வட்டாரத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றது. 


ஸ்ரேயஸூடன் ஜோடி சேர்ந்த ஜடேஜாவும் அரை சதம் கடந்து அசத்தினார். 99 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கின்றார். ஐந்தாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இந்த இணை, 192 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து தடுமாறி கொண்டிருந்த இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதனால், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 258 ரன்கள் எடுத்துள்ளது. 






முன்னதாக, டி20 உலக கோப்பை பிறகு நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. இதில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி மூன்று டி20 போட்டிகளையும் வென்று டி20 தொடரை கைப்பற்றியது. இந்நிலையில், இன்று தொடங்கி இருக்கும் முதல் டெஸ்ட் போட்டி வரும் திங்கட்கிழமை வரை நடைபெற இருக்கிறது.





மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண