டி20 உலக கோப்பை பிறகு நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. இதில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி மூன்று டி20 போட்டிகளையும் வென்று டி20 தொடரை கைப்பற்றியது. அதனை அடுத்து, இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் இன்று தொடங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரஹானே, பேட்டிங் தேர்வு செய்தார். போட்டி நடைபெறுவதற்கு முன்பே, முதல் டெஸ்ட் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் அறிமுகமாக இருப்பதாக இந்திய டெஸ்ட் அணியின் தற்காலிக கேப்டன் ரஹானே தெரிவித்திருந்தார். அதன்படி, இந்திய அணியில் அறிமுகமாகும் 303 வது வீரர் என்ற பெருமையை ஷ்ரேயாஸ் ஐயர் பெற்றார்.
ஓப்பனிங் களமிறங்கிய மயாங்க் பெரிதாக சோபிக்கவில்லை. சிறப்பாக ஆடிய மற்றொரு ஓப்பனரான கில், அரைசதம் கடந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவரை அடுத்து பேட்டிங் செய்த புஜாரா, ரஹானா ஆகியோரும் ஏமாற்றம் அளித்த நிலையில் அறிமுக போட்டியில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் அரை சதம் கடந்து அடித்து கொண்டிருக்கிறார். 94 பந்துகளில் அரை சதம் கடந்த ஸ்ரேயாஸ் ஐயருக்கு, கிரிக்கெட் வட்டாரத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றது.
மும்பையை சேர்ந்த 26 வயதான ஷ்ரேயாஸ் ஐயர் 54 முதல்தர போட்டிகளில் விளையாடி 12 சதங்கள், 23 அரைசதங்கள் உள்பட 4592 ரன்கள் குவித்துள்ளார்.
ட்விட்டர் ரியாக்ஷன்:
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்