டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அரை இறுதியின் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இதில், வாடேவின் கடைசி நேர அசத்தல் சிக்சர்களால் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 


இந்த போட்டியில் வார்னர் 49 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவின் சேஸிங்கில் முக்கிய பங்காற்றினார். முதல் இன்னிங்ஸின் போது ஹஃபீஸ் வீசிய 8வது ஓவரில், வார்னர் சிக்ஸ் அடித்தார். இந்த பந்து சமூகவலைதளத்தில் வைரலானது. லெக் ஸ்டம்பை விட்டு விலகிச் சென்ற இந்த பந்தையும் விட்டு வைக்காது சிக்சர் அடித்து அசத்தினார் வார்னர். இது குறித்து கமெண்ட் செய்திருந்த கம்பீர், ‘ஸ்பிரிட் ஆஃப் தி கிரிக்கெட்’ என்பதை மையப்படுத்தி கருத்து தெரிவித்திருந்தார். 


”கையில் இருந்து தவறி விழுந்த ஒரு பந்தை இப்படி பேட்டர் அடிப்பது, கிரிக்கெட் விளையாட்டின் ஸ்பிரிட்டை மீறிய செயல். வெட்கக்கேடு” என ட்வீட் செய்திருந்தார். அதுமட்டுமின்றி, இது தொடர்பாக என்ன நினைக்கிறீர்கள் என கிரிக்கெட் வீரர் அஷ்வினையும் டேக் செய்து கேள்வி எழுப்பி இருந்தார் கம்பீர்.


கம்பீர் ட்வீட்:






ஏற்கனவே, ஐபிஎல் தொடரின்போது மன்கட் முறையில் பட்லரை அஷ்வின் அவுட் செய்திருந்த சம்பவம் வைரலனாது. கிரிக்கெட் விதிமுறைகளின்படி அது சரிதான் என்றாலும், ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்டுக்கு எதிரானது என்ற கருத்துகளும் முன்வைக்கப்பட்டன. இப்போது வார்னர் சம்பந்தமான கம்பீரின் ட்வீட்டுக்கு அஷ்வின் பதில் அளித்திருக்கிறார். அதில், “கம்பீர் சொல்வது என்னவென்றால், இது சரியென்றால் அந்த செயலும் (மன்கட்) சரிதான், அந்த செயல் தவறு என்றால் இதுவும் தவறுதான். நியாயம் தானே? ” என கொஞ்சம் நக்கல் கலந்து பதில் அளித்திருக்கிறார் அஷ்வின்


அஷ்வின் ட்வீட்:






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண