மெஸ்ஸியின் ஜெர்சி:


கால்பந்து உலகக் கோப்பை 2022 தொடர் கத்தாரில் நடைபெற்றது. இதில், 36  ஆண்டுகளுக்கு பிறகு லியோனல் மெஸ்ஸி தலைமியிலான அர்ஜென்டினா அணி  3 வது முறையாக உலகக் கோப்பையை வென்றது. முக்கியமாக இந்த உலகக் கோப்பை தொடரில் ஆட்ட நாயகன் விருதையும் மெஸ்ஸியே தட்டிச்சென்றார்.


இந்த உலகக் கோப்பை தொடரின்போது மெஸ்ஸி அணிந்திருந்த அர்ஜென்டினா அணியின் 6 ஜெர்சிகள் நியூயார்க்கில் ஏலம் விடப்பட்டது.  இந்த ஏலத்தில் அந்த 6 ஜெர்சிகளும் 7.8 மில்லியன் டாலருக்கு விற்பனையாகி சாதனை படைத்தன. இது இந்திய மதிப்பில் ரூ.65 கோடிக்கு விற்பனையாகியது.


ஒரு வீரருக்கு சொந்தமான ஒரு பொருள் அதிக விலைக்கு விற்பனையானது இதுவே முதல் முறை என ஏலத்தை நடத்திய நிறுவனம் தெரிவித்தது. அந்த 6 ஜெர்சிகளில் உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் மெஸ்ஸி அணிந்திருந்த ஜெர்சியும் இடம்பெற்று இருந்ததால் இவ்வளவு பெரிய தொகைக்கு அவை விற்பனையாகியதாக ஏலத்தை நடத்திய நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


ஜெர்சி நம்பர் 10-க்கு ஓய்வு:


இதனிடையே 2026 ஆம் ஆண்டு நடக்க உள்ள பிஃபா உலகக் கோப்பை தொடரில் மெஸ்ஸி விளையாட வாய்ப்பு மிகக்குறைவு என்ற சூழலில், அவரது ஜெர்சி நம்பர் 10ஐ இனிமேல் வேறு யாரும் பயன்படுத்தாத வகையில் ஜெர்சி நம்பர் 10க்கு ஓய்வு அளிக்க அர்ஜென்டினா கால்பந்து வாரியமானது முடிவு செய்துள்ளது.


மெஸ்ஸிக்கு கவுரம்:


இது குறித்து அர்ஜென்டினா கால்பந்து வாரியத்தின் தலைவர் கிளாடியோ டாபியா பேசுகையில், “அர்ஜென்டினா அணியில் இருந்து அவர் ஓய்வு பெற்ற பிறகு இந்த ஜெர்சியை யாரும் பயன்படுத்த முடியாது. இது அவருக்கு நாங்கள் அளிக்கும் சிறிய கவுரவம். கடந்த 1986 ஆம் ஆண்டு அர்ஜென்டினா அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்த டியாகோ மரடோனா, ஜெர்சி நம்பர் 10ஐ பயன்படுத்தியிருந்தார். 


ஆனால், கடந்த 2002 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடரின் போது 1 முதல் 23 வரையிலான ஜெர்சி நம்பர்களை அனைத்து வீரர்களும் அணிந்து கொள்ளலாம் என்று பிஃபா விதிமுறையில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக டியானோ மரடோனாவிற்கு பெருமை சேர்க்க இருந்த நிலையில், அவரது ஜெர்சி நம்பர் 10க்கு ஓய்வு அளிக்காமல் லியோனல் மெஸ்ஸி பயன்படுத்துவதற்கு வழங்கப்பட்டது.


இந்த நிலையில் தான் மரடோனாவிற்கு கிடைக்காத அந்த அங்கீகாரம் தற்போது லியோனல் மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரது ஓய்விற்கு பிறகு ஜெர்சி நம்பர் 10ஐ யாரும் பயன்படுத்தாத வகையில் ஓய்வு அளிக்க அர்ஜென்டினா கால்பந்து வாரியம் முடிவு செய்துள்ளது” என்று கூறியுள்ளார்.


மேலும் படிக்க: Pro Kabaddi 2023: போராடி தோற்ற தமிழ் தலைவாஸ்! பெங்களூரு புல்ஸ் த்ரில் வெற்றி!


மேலும் படிக்க: Shubman Gill: "தொடர்ச்சியா சொதப்புனா அவ்ளோதான்" சுப்மன் கில்லை எச்சரித்த தினேஷ் கார்த்திக்!