உலகக்கோப்பைகள் முடியும்போதெல்லாம் பிசிசிஐ அடுத்த 4 வருடங்களுக்கான திட்டங்களை வகுப்பது வழக்கம். விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகிய நிலையில், ரோகித் சர்மா தற்போது கேப்டனாக இருந்து வருகிறார். அவருக்கு தற்போது 35 வயதாகும் நிலையில், இன்னும் அதிகமான காலம் விளையாட வாய்ப்பில்லை. அதற்குள் அடுத்தக்கட்ட கேப்டனை தயார் படுத்த பிசிசிஐ எண்ணுகிறது. போட்டிகளும் தொடர்ந்து நடைபெறுவதால் ஓய்வு கொடுக்க வேண்டிய நிலையும் உள்ளது. தற்போது ரோகித் சர்மா மூன்று வடிவிலான கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக இருப்பதால் அவருக்கு அடிக்கடி ஓய்வு அளிக்க இயலாமல் இருந்து வருகிறது. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியதால், ஓய்வு அதிகம் கிடைக்கிறது. அதேபோல ரோகித் சர்மாவுக்கும் அடிக்கடி ஓய்வு கொடுக்க பிசிசிஐ விரும்புவதாக தெரிகிறது. எனவே, ரோகித் சர்மா அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெற உள்ள உலகக் கோப்பை தொடருக்குப்பிறகு கேப்டனாக நீடிக்க வாய்ப்பில்லை. இனிமேல் பொதுவாக விராட் கோலிக்கு பெரிய தொடரை தவிர்த்து மற்ற டி20 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டு, ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்த வலியுறுத்தப்படும் என பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது.



ஹர்திக் - பண்ட்


இது தொடர்பாக வெளியாகியுள்ள ஒரு செய்திக்குறிப்பில், "ஆஸ்திரேலியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடருக்குப்பிறகு, விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோரிடம் பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் ஒரு விரிவான கலந்துரையாடலை மேற்கொள்வார்கள். ஆனால் அவர்கள் ஏதாவது ஒரு வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட மாட்டார்கள். இருவரும் முக்கியமான வீரர்கள் என்றாலும் இருவருமே 35 வயதை நெருங்கும் பட்சத்தில், தொடர்ந்து பெரிய தொடர்கள், ஐசிசி தொடர்கள் வருவதால் அவர்களுக்கு சுழற்சி முறை மற்றும் ஓய்வுகள் தேவைப்படும், ஆனால், கேப்டனை அடிக்கடி சுழற்சி முறையில் மாற்ற முடியாது. டி20-யில் ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் அல்லது கே.எல். ராகுல் ஆகியோரில் ஒருவரை கேப்டன் பதவிக்கு தயார் படுத்தி, ரோகித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து படிப்படியாக வெளியேற்றலாம்.


தொடர்புடைய செய்திகள்: 'நெத்தியில பொட்டு இல்லையா? அப்போ பேச மாட்டேன்..' : பெண் பத்திரிகையாளருக்கு நேர்ந்த அவமதிப்பு.. கொந்தளித்த மக்கள்.. நடந்தது என்ன?


பிசிசிஐ திட்டம் - விராட் கோலி


ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பைக்குப்பின் விராட் கோலியால் தொடர்ந்து டி20 போட்டியில் விளையாட முடியாது. விராட் கோலியை ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்த கேட்டுக்கொள்ளப்படும். தேர்வாளர்கள் அவரை முக்கியமான மற்றும் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான போட்டிகளுக்கு மட்டும் தேர்வு செய்வார்கள். அடுத்த வருடத்தில் டி20 உலகக்கோப்பையும் இல்லாத காரணத்தால் அந்த வருடம் டி20க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படாது.



பிசிசிஐ திட்டம் - ரோகித் சர்மா 


ரோகித் சர்மா 2023 உலகக் கோப்பையில் இருந்து ரோகித் சர்மா மூன்று வகை கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக தொடர வாய்ப்பில்லை. ஆனால், 2024 வரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக அதிக அளவில் கவனம் செலுத்துவார் என்று தெரிகிறது. ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்குப்பின், கேப்டன் பதவி குறித்து ரோகித் சர்மா உடன் பிசிசிஐ மற்றும் தேர்வாளர்கள் ஆலோசனை நடத்தும் நிலையில், காயம் மற்றும் உடற்தகுதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரோகித் சர்மா 2024 டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் கேப்டனாக இருக்க வாய்ப்பில்லை என்பது உறுதி. அதற்குப் பதிலாக ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் ஆகியோர் கேப்ட்டனாக உருவாக்கப்பட்டு வருகிறார்கள். மூவரில் ஹர்திக் பாண்ட்யா தேர்வாளர்களை அதிகமாக கவர்ந்துள்ளார். ஹர்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட் கேப்டன் பதவியில் சிறப்பாக செயல்பட்டு வருவதால், இருவரும் ஐ.பி.எல். தொடரில் சிறந்த கேப்டன் என்பதை பலமுறை நிரூபித்துள்ளனர். இருப்பினும் யார் கேப்டன் என்பது குறித்து 2023 உலகக் கோப்பைக்கு பின் விரிவாக பேசப்படும்.