T20 உலகக் கோப்பை 2022 தொடர் நேற்றைய சூப்பர் 12 சுற்றில் பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்த தொடரில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது. இந்தியா 6 புள்ளிகளுடன் குரூப் 2 புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவிற்கு அடுத்தபடியாக தென் ஆப்பிரிக்கா (ஐந்து புள்ளிகள்), பாகிஸ்தான் (4 புள்ளிகள்) உள்ளன. நெதர்லாந்து நான்கு போட்டிகளில் இரண்டு புள்ளிகளை மட்டும் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. இதனால் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது. 






தற்போதுவரை, டி20 உலகக் கோப்பை தொடர் குரூப் பி பிரிவில் தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா அணிகள் மட்டுமே அரையிறுதிக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளது. முன்னதாக பாகிஸ்தான் அணி, இந்தியா மற்றும் ஜிம்பாவே அணிக்கு எதிராக கடைசி பந்தில் தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு மீண்டெழுந்த பாகிஸ்தான் அணி, வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்தியது. 


4 போட்டிகளில் விளையாடியுள்ள பாகிஸ்தான் அணி 2 வெற்றி, 2 தோல்வியுடன் குரூப் பி பிரிவு புள்ளி பட்டியலில் மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்த தொடர் வெற்றிமூலம் பாகிஸ்தான் அணி இன்னும் அரையிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ளது. 






இந்தநிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பாகிஸ்தான் அணியின் வெற்றி இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பை பாதித்துள்ளதா? அரையிறுதிக்கு தகுதி பெற இந்தியா இப்போது என்ன செய்ய வேண்டும்?


வரும் 6 ம் தேதி ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான பாகிஸ்தான் அணியில் வெற்ற் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால், அரையிறுதிக்கு தகுதிபெறும். தோல்வியுற்றால் அரையிறுதி வாய்ப்பை இழக்க நேரிடும். அதே நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா தங்களது கடைசி சூப்பர்12 போட்டிகளில் வெற்றி பெற்றால் இந்தியா 6 புள்ளிகளுடன் தொடரும், தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் முறையே 7 மற்றும் 6 புள்ளிகளுடன் இருக்கும். இந்தியாவை விட பாகிஸ்தானில் சிறந்த NRR உள்ளது குறிப்பிடத்தக்கது. 


எனவே, இந்தியா அணி ஜிம்பாவே அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதிக்கு செல்லும்.