டிஎன்பிஎல் தொடரில் சேலம் அணியை வீழ்த்தி 3வது வெற்றியை பதிவு செய்த நேல்லை அணி, புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

டிஎன்பில் தொடர்:

உள்ளூர் வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெறும் டி.என்.பி.எல். என்று அழைக்கப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் 20 ஓவர் தொடர் கடந்த 12ம் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், தற்போது வரை 13 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ளன. பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முதல் நான்கு இடங்களை உறுதி செய்ய அனைத்து அணிகளும் கடுமையாக மோதி வருகின்றன.

மழையால் தாமதம்:

இந்த நிலையில் தான் நேற்று நடைபெற்ற தொடரின் 13வது லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்ட்டன்ஸ் ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்ற நெல்லை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடர்ந்து களமிறங்கிய சேலம் அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 115 ரன்களை எடுத்து இருந்தது. அப்போது மழை குறுக்கிட்டதால், போட்டி16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. மேலும் டக்-வர்த் லூயிஸ் முறைப்படி நெல்லை அணிக்கு 129 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.  

நெல்லை அணி அபாரம்:

இலக்கை நோக்கி களமிறங்கிய நெல்லை அணி ஆரம்பத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், இறுதியில் அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்ஸ்மேஷ சூர்யபிரகாஷால் 15.4 ஓவர்களில் இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. இது நடப்பு தொடரில் நெல்லை அணி பதிவு செய்யும் 3வது வெற்றியாகும். கடைசியாக விளையாடிய போட்டியில் தோல்வியுற்ற நிலையில், நேற்றைய போட்டியின் மூலம் நெல்லை அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ளது. அதோடு, புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கும் முன்னேறியுள்ளது.

புள்ளிப்பட்டியல்:

அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளிகள்
திண்டுக்கல் டிராகன்ஸ் 3 3 0 6
லைகா கோவை கிங்ஸ் 4 3 1 6
நெல்லை ராயல் கிங்ஸ் 4 3 1 6
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 4 2 2 4
சேலம் ஸ்பார்டன்ஸ் 3 1 2 2
IDream திருப்பூர் தமிழர்கள் 3 1 2 2
பா11சி திருச்சி 3 0 3 0
Siechem மதுரை பாந்தர்ஸ் 2 0 2 0

திண்டுக்கல் ஆதிக்கம்:

நடப்பு தொடரில் தோல்வியையே சந்திக்காமல், விளையாடிய 3 போட்டிகளிலும் வென்று திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. அதைதொடர்ந்து தலா 3 வெற்றிகளுடன் சேலம் மற்றும் திருப்பூர் அணிகள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. சேப்பாக் அணி 2 வெற்றிகளுடன் 4வது இடத்தில் நீடிக்கிறது. இதுவரை ஒரு வெற்றியைக்கூட பதிவு செய்யாத திருச்சி மற்றும் மதுரை அணிகள், முறையே கடைசி இரண்டு இடங்களில் நீடிக்கின்றன. இந்த நிலையில் டிஎன்பில் தொடரில் இன்று எந்தபோட்டியும் நடைபெறவில்லை. அதேநேரம், நாளை நெல்லை மற்றும் சேப்பாக், சேலம் மற்றும் மதுரை இடையே என இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன.