இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுவதில் சிரமம் ஏற்படும்.


டி20 உலகக் கோப்பை 2024:


ஐசிசி டி20 உலகக் கோப்பை கடந்த ஜூன் 2 ஆம் தேதி தொடங்கியது. இதில் இதுவரை 15 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ளது. முன்னதாக கடந்த ஜூன் 6  ஆம் தேதி அமெரிக்காவின் டல்லாஸில் நடந்த போட்டியில் அமெரிக்க அணியிடம் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. இது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டு போட்டிகளிலும் வெற்றி அடைந்த அமெரிக்க அணி 4 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. இச்சூழலில் தான் பாகிஸ்தான் அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.


அதற்கான முக்கிய காரணம் குரூப் ஏ சுற்றி இடம் பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிதான் முதலில் பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்பட்டது. அதன்படி, குரூப் ஏவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளான அமெரிக்கா, அயர்லாந்து, கனடா ஆகிய அணிகள் லீக் ஆட்டங்களுடன் வெளியேறி விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களின் கணிப்புகளை பொய்யாக்கும் படி அதிரடியான ஆட்டத்தை விளையாடி வருகிறது அமெரிக்க அணி. ஒருவேளை அமெரிக்கா அணி இந்திய அணியிடம் தோல்வியடைந்தாலும், அயர்லாந்து அணியை வீழ்த்தினாலே சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியும்.


இந்திய அணியிடம் தோற்றால் பாகிஸ்தான் நிலைமை?


அதேபோல் பாகிஸ்தான் அணி இந்திய அணியிடம் தோல்வியடைந்தால், சூப்பர் 8 சுற்று கனவு மொத்தமாக முடிவுக்கு வரும். அதேநேரம் இன்று (ஜூன் 12) நடைபெறவுள்ள ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தி பின்னர் அமெரிக்காவை இந்தியா வீழ்த்தினால், அமெரிக்கா 6 புள்ளிகளைப் பெறும்.


மீதமுள்ள மூன்று குரூப் ஸ்டேஜ் ஆட்டங்களில் (பாகிஸ்தான், கனடா, அயர்லாந்துக்கு எதிராக) இந்தியா வெற்றி பெற்றால், அவர்கள் 8 புள்ளிகளைக் குவித்து, ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 சூப்பர்-8 கட்டத்தில் ஒரு இடத்தைப் பெறுவார்கள். இருப்பினும், இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தோல்வியடைந்தால் பாகிஸ்தான் அணிக்கு இரண்டு போட்டிகள் மட்டுமே எஞ்சியிருக்கும்.


இந்த இரண்டு போட்டிகளிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்றாலும், 4 புள்ளிகளை மட்டுமே எட்டும், அமெரிக்கா 6 புள்ளிகளுடன் சூப்பர்-8 சுற்றுக்கு எட்டும். சூப்பர்-8 சுற்று தகுதி பெற மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெற வேண்டும். அதோடு எஞ்சியிருக்கும் இரண்டு குரூப் ஸ்டேஜ் ஆட்டங்களில் இந்தியா மற்றும் அயர்லாந்துக்கு எதிராக அமெரிக்கா தோல்வியடைந்தால் மட்டுமே குரூப் 8 சுற்றுக்கு பாகிஸ்தான் அணியால் நுழைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் படிக்க: USA Coach: ஜாம்பவான் அணிகளை கதற விடும் அமெரிக்கா! பயிற்சியாளர் ஸ்டூவர்ட் யார் தெரியுமா?


மேலும் படிக்க: T20 WC 2024: அடுத்தடுத்து அதிர்ச்சி! ஜாம்பவான்களை கதறவிடும் கத்துக்குட்டி அணிகள்! அச்சத்தில் சாம்பியன்கள்!