டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் என்றாலே பெரும்பாலானோரின் எதிர்பார்ப்பு இந்தியா – பாகிஸ்தான் போட்டி மீதே இருக்கும். நடப்பு டி20 உலகக்கோப்பையில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் போட்டி நாளை நடக்கிறது.


பாகிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்குமா இந்தியா?


அமெரிக்காவின் மைதானம் சற்று வித்தியாசமாக இருப்பதால் முன்னணி அணிகள் அனைத்தும் தடுமாறி வருகிறது. பாகிஸ்தான் அணியில் பந்துவீச்சிற்கு பலமாக முகமது ஆமீர், ஷாகின் அப்ரிடி, நசீம் ஷா மற்றும் ஹரீஷ் ராஃப் உள்ளனர். சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களான இவர்களை சமாளிக்க வேண்டியது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.


குறிப்பாக, இவர்களுக்கு எதிரான இந்திய கேப்டன் ரோகித்சர்மாவின் செயல்பாடு ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. இதனால், தனது இயல்பான மற்றும் அதிரடியான ஆட்டத்தை ரோகித்சர்மா வெளிப்படுத்தினால் நிச்சயம் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களுக்கு சிரமம் ஏற்படுவது உறுதி. அதேபோல, விராட் கோலியும் கடந்த டி20 உலகக்கோப்பையில் எப்படி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாரோ? அதேபோல பொறுப்பான ஆட்டத்தை இந்த போட்டியிலும் வெளிப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.


சிறப்பு பயிற்சி:


 இந்திய அணிக்கு சவாலாக திகழும் இவர்களது பந்துவீச்சை சமாளிப்பதற்காக கேப்டன் ரோகித் சர்மாவும், விராட் கோலி உள்ளிட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பு பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டனர். இந்திய அணிக்கு எப்படி வேகப்பந்து வீச்சு சவாலானதாக இருக்குமோ? அதேபோல பாகிஸ்தான் அணிக்கும் இந்திய பவுலிங் சவாலனதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.


இந்திய அணியில் பும்ரா, சிராஜ் வேகத்தில் அசத்த வேண்டியது அவசியம் ஆகும். கடந்த போட்டியில் சிறப்பாக வீசிய அர்ஷ்தீப் பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பாக வீசினால் கட்டாயம்  பாகிஸ்தானுக்கு நெருக்கடி ஏற்படும். பாகிஸ்தான் அணி கடந்த போட்டியில் அமெரிக்காவுடன் தோற்றதால் இந்தியாவுக்கு எதிராக கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


பாகிஸ்தானுக்கு நெருக்கடி:


ஏனென்றால், இந்திய அணிக்கு எதிரான போட்டியில் தோற்றால் பாகிஸ்தான் சூப்பர் 8 சுற்றுக்கு செல்வது சிக்கலானதாக மாறிவிடும். ஏனென்றால் தற்போது அமெரிக்கா 2 வெற்றிகளுடன் குரூப் ஏ-வில் முதலிடத்தில் உள்ளது. நியூயார்க் நகரத்தில் முதன்முறையாக மோதிக் கொள்ளும் இந்தியா – பாகிஸ்தான் போட்டியை பார்க் அமெரிக்காவில் வசிக்கும் இரு நாட்டு ரசிகர்களும் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க: USA Coach: ஜாம்பவான் அணிகளை கதற விடும் அமெரிக்கா! பயிற்சியாளர் ஸ்டூவர்ட் யார் தெரியுமா?


மேலும் படிக்க: T20 WC 2024: அடுத்தடுத்து அதிர்ச்சி! ஜாம்பவான்களை கதறவிடும் கத்துக்குட்டி அணிகள்! அச்சத்தில் சாம்பியன்கள்!