ஐ.சி.சி. ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இதுநாள் வரை 4வது இடத்தில் இருந்த இந்திய அணியை பின்னுக்கு தள்ளி பாகிஸ்தான் அணி 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி பாகிஸ்தானை விட ஒரு புள்ளிகள் குறைந்து 5வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.  






பாகிஸ்தான் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடி தொடரை கைப்பற்றியதால் அந்த அணி தரவரிசையில் புள்ளிப்பட்டியலில் முன்னேறியுள்ளது.


முதல் இடத்தில் நியூசிலாந்து அணி 125 புள்ளிகளுடன் உள்ளது. இரண்டாவது இடத்தில் இங்கிலாந்து 124 புள்ளிகளுடன் உள்ளது. ஆஸ்திரேலியா 107 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. 6வது இடத்தில் தென்னாப்பிரிக்காவும், 7வது இடத்தில் வங்காளதேசமும், 8வது இடத்தில் இலங்கையும், 9வது இடத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியும், 10வது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியும் உள்ளது.


அதேசமயத்தில், டி20 போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் மூன்றாவது இடத்தில் உள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண