இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர்:


இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெற உள்ளது. முன்னதாக ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனிடையே இந்திய அணியின் முக்கிய வீரர்களான கே.எல்.ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் காயம் கரணமாக போட்டியில் இருந்து விலகியுள்ளனர். முன்னதாக விராட் கோலியும் ஓய்வில் இருக்கிறார். நட்சத்திர வீரர்களின் இந்த ஓய்வு இந்திய அணிக்கு பெரும் நெருக்கடியாக பார்க்கப்படுகிறது.


2-வது போட்டியில் இடம்பெற்ற சர்ஃபராஸ் கான்:


அனுபவமற்ற வீரர்களால் ஏற்கனவே இந்திய அணியின் பேட்டிங் மோசமாக இருந்தாலும், அறிமுக வீரர்களை சேர்க்க வேண்டிய கட்டாயமும் இந்திய அணிக்கு இருக்கிறது.  இதனால் கே.எல் ராகுல் இடத்தில் எந்த வீரர் தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வி உள்ளது. இதற்காக இந்திய அணியின் ரஜத் படிதர் மற்றும் சர்ஃபராஸ் கான் ஆகிய இருவரும் போட்டியில் உள்ளனர். அதேநேரம், சர்ஃபராஸ் கான் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்றும் கூறப்படுகிறது.


இந்நிலையில், என் சகோதரன் மிகவும் கடினமாக உழைத்து தனது முயற்சியின் பலனைப் பெற்றுள்ளான். இந்திய அணியில் அவருக்கான  இடத்தை உறுதிப்படுத்துவதுதான் இப்போது ஒரே விஷயம் என்று சர்ஃபராஸ் கானின் தம்பி முஷீர் கான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள அவர்,”என்ன நடந்தாலும் சரி நானும் என் சகோதரனும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பது எங்கள் தந்தையின் கனவு. அதனால் தான் நாங்கள் முயற்சிசெய்கிறோம். என் சகோதரன் கடினமாக உழைத்து தற்போது அதற்கான பலனை பெற்றுள்ளான்.


இந்திய அணியில் அவருக்கான இடத்தை தற்போது உறுதிப்படுத்துவது தான் ஒரே விஷயம். என் சகோதரன் முன்னேறுவதைப் பார்த்து மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இப்போது உணர்கிறேன். நானும் பின்னால் இருந்து கடினமாக உழைக்கிறேன்என்று பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோவை ஐசிசி தங்களது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


வீடியோ இதோ:


 






முன்னதாக 2024 ஆம் ஆண்டு U-19 உலகக் கோப்பை போட்டியில் இந்திய் அணிக்காக விளையாடி வருகிறார் முசீர் கான். முக்கியமாக அவர் விளையாடியுள்ள நான்கு போட்டிகளில் 325 ரன்களை குவித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார். அதேபோல்,  2024 U-19 உலகக் கோப்பை போட்டியில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலிலும் முதல் இடத்தில் இருக்கிறார். அதேபோல், முதல்தர கிரிக்கெட்டில் 69 சராசரி வைத்திருக்கும் இவரது சகோதரர் சர்ஃபராஸ் கான், ஒரு முச்சதத்துடன் 14 சதங்கள் மற்றும் 11 அரைசதங்களுடன் 3912 ரன்கள் குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: Praggnanandhaa: பட்ஜெட் உரையில் பிரக்ஞானந்தாவை புகழ்ந்த நிர்மலா சீதாராமன்!


மேலும் படிக்க: ICC Test Rankings: ஐசிசி டெஸ்ட் தரவரிசை: முதல் இடத்தை அலங்கரிக்கும் அஸ்வின்! ஆல்-ரவுண்டர் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தும் ஜடேஜா!