கிரிக்கெட் வீரர்கள் தொடர்பாக பாட புத்தகங்களில் இடம்பெற்றால் அது மிகவும் வைரலாகும். அந்தவகையில் தற்போது கிரிக்கெட் வீரர் ஒருவரை பயன்படுத்தி பாடம் ஒன்றின் கேள்வி பதிவிடப்பட்டுள்ளது. அதன்படி பாகிஸ்தான் வீரர் பாபர் அசாமை வைத்து பாடம் ஒன்றில் கேள்வி வந்துள்ளது. இது தொடர்பாக ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட் வேகமாக வைரலாகி வருகிறது. 


 


பாகிஸ்தான் நாட்டில் உள்ள ஃபெடரல் பாடத் திட்டத்தில் இந்த கேள்வி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. 9 வகுப்பு இயற்பியல் பாடத்தில் இந்த கேள்வி இடம்பெற்றுள்ளது. இயங்காற்றல் (Kinetic Energy) தொடர்பான இயற்பியல் பாடத்தில் பாபர் அசாம் ஒரு கவர் டிரைவ் அடிக்கிறார். அப்போது 150 ஜூல் இயங்காற்றல் மூலம் பேட்டை வைத்து பந்தை பவுண்டரிக்கு அடிக்கும் போது பந்து எந்த வேகத்தில் பவுண்டரி கோட்டை தொடும் என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. 


 






கிரிக்கெட் வீரரின் கவர் டிரைவ் வைத்து இயற்பியல் கற்று தந்துள்ளது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 


 






 






 






இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.




மேலும் படிக்க:அன்று தோனி ரோகித்திற்கு செய்ததை இன்று ரோகித் பண்டிற்கு செய்ய வேண்டும் - வாசிம் ஜாஃபரின் வைரல் ட்வீட்