ஆசிய கோப்பையின் முதல் போட்டியில் நேபாள அணியை பாகிஸ்தான் எதிர்கொண்டு ஆடி வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 342 ரன்கள் எடுத்தது.
பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 131 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உதவியுடன் 151 ரன்கள் குவித்தார். பாபரை தொடர்ந்து, இப்திகார் அகமது வெறும் 71 பந்துகளில் 109 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடினார்.
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் படைத்த சாதனை:
பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தனது பெயரில் ஒரு பெரிய சாதனையை படைத்துள்ளார். நேபாளத்திற்கு எதிராக பாபர் அசாம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனது 19வது சதத்தை அடித்தார். இந்த 19வது சதம் 102 இன்னிங்ஸ்களில் இருந்து வந்தது.
இதன் மூலம், குறைந்த இன்னிங்சில் 19 சதங்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார். அதே நேரத்தில், இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பேட்ஸ்மேன் ஹஷிம் ஆம்லா உள்ளார். இவர் தனது 104 இன்னிங்ஸ்களில் 19 சதங்கள் அடித்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.
விராட் கோலி எத்தனையாவது இடம்..?
அதிவேகமாக ஒருநாள் போட்டியில் 19 சதம் அடித்தவர்கள் பட்டியலில் இந்திய நட்சத்திர வீரர் விராட் கோலி மூன்றாவது இடத்தில் உள்ளார். விராட் கோலி 124 இன்னிங்சில் 19 சதங்கள் அடித்துள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 139 இன்னிங்ஸ்களில் 19 சதங்களை பூர்த்தி செய்துள்ளார். 5வது இடத்தில் தென்னாப்பிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் 171 இன்னிங்சில் 19 சதங்கள் அடித்துள்ளார்.
ஆசியக் கோப்பையில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்:
ஆசியக் கோப்பை போட்டியில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார் பாபர் அசாம். கடந்த 2012ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிரான விராட் கோலி 183 ரன்கள் எடுத்ததே தற்போது வரை முதல் இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் 151 ரன்கள் எடுத்ததன் மூலம் பாபர் அசாம் இரண்டாம் இடத்திற்கு முன்னேறினார்.
ஆசிய கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர்
183 - விராட் கோலி
151 - பாபர் அசாம் (இன்று)
144 - யூனிஸ் கான்
144 - முஷ்பிகுர் ரஹீம்
143 - சோயிப் மாலிக்
136 - விராட் கோலி
ஆசியக் கோப்பையில் கேப்டனாக அதிக ரன்கள்:
ஆசிய கோப்பை வரலாற்றில் 150 ரன்கள் எடுத்த முதல் கேப்டன் என்ற பெருமையை பாபர் அசாம் பெற்றுள்ளார்.
ஒருநாள் போட்டியில் கடைசி 22 இன்னிங்ஸ்களில் பாபர் அசாம்:
158(139), 57(72), 114(83), 105*(115), 103(107), 77(93), 1(3), 74(85), 57(65), 91(125) , 66(82), 79(114), 4(13), 49(46), 65(66), 54(62), 107(117), 1(5), 0(3), 53(66) , 60(86), 151(131)
பாபர் அசாமை விட 3 பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் மட்டுமே சர்வதேச அளவில் அதிக சதம் அடித்துள்ளனர்
41 – யூனிஸ் கான் (491 இன்ஸ்)
39 – முகமது யூசுப் (426 இன்ஸ்)
35 – இன்சமாம்-உல்-ஹக் (547 இன்ஸ்)
31 – பாபர் ஆசம் (288 இன்ஸ்)
31 – சயீத் அன்வர் (335 இன்ஸ்)
31 – ஜாவேத் மியான்டட் (407 இன்ஸ்)