ஆசியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கிரிக்கெட் போட்டியான ஆசியக் கோப்பை 2023, ஆகஸ்ட் 30ம் தேதி (இன்று) முதல் தொடங்கவுள்ளது. இந்த போட்டியை பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்துகின்றனர். கடந்த 2022ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசியக் கோப்பை டி20 வடிவத்தில் நடத்தப்பட்ட நிலையில், இந்தாண்டு நடத்தப்படும் போட்டி 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் வடிவத்தில் நடைபெறுகிறது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட்டானது கடந்த 1980 முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு நடைபெறும் ஆசியக் கோப்பை போட்டியில் மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கின்றன. இது மொத்தம் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன:
குரூப் ஏ
- இந்தியா
- பாகிஸ்தான்
- நேபாளம்
குரூப் பி
- ஆப்கானிஸ்தான்
- வங்கதேசம்
- இலங்கை
இந்தநிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த போட்டியானது இலங்கையின் பல்லேகலேயில் நடைபெறவுள்ளதால் இந்தப் போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆசிய கோப்பை 2023க்கு முன்னதாக இந்திய அணி ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய ரசிகர்கள் இனி ஆசியக் கோப்பையின் அனைத்துப் போட்டிகளையும் இலவசமாகவும் HD வடிவில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த போட்டிகளை மொபைலை தொடர்ந்து இனி டிவியிலும் போட்டியை இலவசமாகப் பார்க்க முடியும். இதற்கான பெரிய அறிவிப்பை தூர்தர்ஷன் வெளியிட்டுள்ளது.
டிடி ஸ்போர்ட்ஸின் எச்டி சேனலில் இந்திய ரசிகர்கள் ஆசிய கோப்பையின் அனைத்து போட்டிகளையும் இலவசமாகப் பார்க்கலாம். இதற்காக அவர்கள் ஒரு ரூபாய் கூட செலுத்த வேண்டியதில்லை. இதற்கு முன்பு டிடி ஸ்போர்ட்ஸ் HD யில் இல்லை.
இனி இன்றைய ஆசியக் கோப்பை முதல் HD வடிவத்தில் பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஹாட்ஸ்டார் நிறுவனம் ஆசிய கோப்பையை மொபைலில் இலவசமாக பார்க்கலாம் என அறிவித்திருந்தது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆசிய கோப்பைக்கு முழுமையாக தயாராகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்காக, இந்திய அணி (இன்று) புதன்கிழமை இலங்கை புறப்பட்டது. இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை இலங்கையில் உள்ள பல்லேகலேயில் விளையாடவுள்ளது. மேலும், இந்தியா தனது இரண்டாவது போட்டியில் நேபாளத்தை வருகின்ற திங்கள்கிழமை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியும் பல்லேகலவில் நடைபெறவுள்ளது. இந்திய அணியுடன் கேஎல் ராகுல் இலங்கை செல்லவில்லை. தற்போது பெங்களூரில் இருக்கிறார். இந்திய அணியின் முதல் இரண்டு போட்டிகளில் கே.எல்.ராகுல் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது பும்ரா, ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், பிரபல கிருஷ்ணா, சஞ்சு சாம்சன் (காத்திருப்பு வீரர்)
பாகிஸ்தான் அணி:
பாபர் அசாம் (கேப்டன்), அப்துல்லா ஷபிக், ஃபகர் ஜமான், இமாம் உல் ஹக், சல்மான் அலி ஆகா, இப்திகார் அகமது, முகமது ரிஸ்வான், முகமது ஹாரிஸ், ஷதாப் கான், முகமது நவாஸ், உசாமா மிர், ஃபஹீம் அஷ்ரப், ஹரிஸ் ரவூப், முகமது வாஸ்ம் ஜூனியர், நசீம் ஷா, ஷஹீன் அப்ரிடி, சவுத் ஷகீல், தயப் தாஹிர் (காத்திருப்பு வீரர்)