Champions Trophy 2025: பாகிஸ்தான் நாட்டில் நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகளின் போட்டி, மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டுள்ளது. 

பிப்ரவரி,19-ம் தேதி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி  கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் தொடங்கியது.8 அணிகள் பங்கேற்கும் தொடரில் இந்தியா, பாகிஸ்தான், நியூஸிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் குரூப் - ஏ பிரிவில் இடம்பெற்றுள்ளன.   குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிய உள்ளது. 

இந்திய அணி வரும் மார்ச் 4-ம் தேதி அன்று துபாயில் நடைபெறும் அரைஇறுதி போட்டியில் விளையாடுகிறது. அதற்கு முன்,  குரூப் சுற்று போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் மார்ச் 2-ம் தேதி அன்று இந்தியா விளையாடுகிறது.

சாம்பியன்ஸ் கோப்பை தொடர் - வெளியேறியது பாகிஸ்தான்:

இன்று (27.02.2025) நடைபெற்ற லீக் ஆட்டத்தில்  பாகிஸ்தான்  - வங்கதேசம் அணிகள் மோதின. போட்டி நடைபெற்ற ராவல்பிண்டி மைதானத்தில் மழை விடாமல் பெய்தது.  இதனால், போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தொட்ர்ந்து மழை பெய்ததால், போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கபட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

பாகிஸ்தான் அணி, இந்தியா, நியூசிலாந்து அணியை எதிர்கொண்ட இரண்டு போட்டியிலும் தோல்வி பெற்றது. நியூசிலாந்து அணியுடன் தோல்வியடைந்தேபோதே, பாகிஸ்தான் அணி தொடரிலிருந்து வெளியேறுவது உறுதியாகிவிட்டது.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை இந்தாண்டு பாகிஸ்தான் நடைபெற்று வருகிறது. 29 ஆண்டுகளுக்குப் பிறகு, சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தான் நடத்துகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி லீக் சுற்று போட்டிகளிலேயே தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்தது. இதுவரை பாகிஸ்தான் அணி பங்கேற்ற 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்தது. வங்கதேச அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டதால், ஒரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது. பாகிஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தைப் பிடித்து தொடரிலிருந்து வெளியேறியுள்ளது. 

சாம்பியன்ஸ் கோப்பை தொடர் - புள்ளிகள் பட்டியல்

சாம்பியன்ஸ் கோப்பை தொடர் புள்ளிப்பட்டியல் - குரூப் A

 

அணி விவரம்  போட்டிகள் வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட் ரன்ரேட் விவரம்
நியூசிலாந்து (Q) 2 2 0 4 +0.863
இந்தியா (Q) 2 2 0 4 +0.647
வங்கதேசம் 3 0 2 1 -0.443
பாகிஸ்தான் 3 0 2 1 -1.087

 

சாம்பியன்ஸ் கோப்பை தொடர் புள்ளிப்பட்டியல் - குரூப் B

அணி விவரம் விளையாடிய போட்டிகள் வெற்றி  தோல்வி  புள்ளிகள்  நெட் ரன்ரேட் விவரம்
தென்னாப்பிரிக்கா 2 1 0 3 +2.140
ஆஸ்திரேலியா 2 1 0 3 +0.475
ஆப்கானிஸ்தான் 2 1 1 2 -0.990
இங்கிலாந்து 2 0 2 0 -0.305

தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து வெளியேறியிருப்பது அந்நாட்டு ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.