PAK vs BAN LIVE Score: பாகிஸ்தான் அபார வெற்றி - உலகக் கோப்பை போட்டியில் வங்கதேசம் அவுட்
PAK vs BAN LIVE Score, ODI World Cup 2023: பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் மோதும் உலகக் கோப்பை போட்டிக்கான அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ஏபிபி நாடு பக்கத்தில் இணைந்திருங்கள்.
தொடர்ந்து 6 தோல்விகளை பதிவு செய்துள்ள வங்கதேசம் அணி, நடப்பு உலகக் கோப்பையில் இருந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது.
7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
31.3 ஓவர்களில் பாகிஸ்தான் 200 ரன்களை எட்டியுள்ளது.
30 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 191 ரன்களை சேர்த்துள்ளது.
பாகிஸ்தான் அணி வெற்றி பெற 22 ஓவர்களில் 34 ரன்கள் தேவை
அதிரடியாக விளையாடி வந்த ஃபகர் ஜமான் 81 ரன்கள் சேர்த்து இருந்தபோது ஆட்டமிழந்தார்.
கேப்டன் பாபர் அசாம் வெறும் 9 ரன்கள் சேர்த்து மெஹிதி ஹாசன் பந்து வீச்சில் நடையை கட்டினார்.
24 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 151 ரன்களை சேர்த்துள்ளது.
23 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 142 ரன்களை குவித்துள்ளது.
அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷபிக் 68 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில், மெஹிதி ஹாசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 124 ரன்களை குவித்துள்ளது.
18 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 105 ரன்களை குவித்துள்ளது.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ஃபகர் ஜமானும், அரைசதம் கடந்து அசத்தினார்.
தொடக்க ஆட்டக்காரரான ஷபிக் 57 பந்துகளில் அரைசதம் எட்டினார்.
16 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 91 ரன்களை குவித்துள்ளது.
15 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 86 ரன்களை சேர்த்துள்ளது.
12 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 65 ரன்களை சேர்த்துள்ளது.
8 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்களை சேர்த்துள்ளது.
6 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 28 ரன்களை சேர்த்துள்ளது.
4 ஓவர்கள் முடிவில் பாகிஸ்தான் அணி 16 ரன்களை சேர்த்துள்ளது.
முதல் ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 6 ரன்களை சேர்த்துள்ளது.
பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மஹ்மதுல்லா அதிகபட்சமாக 56 ரன்களை சேர்த்தார்.
பாகிஸ்தான் அணி சார்பில் அதிகபட்சமாக ஷாஹின் அஃப்ரிடி மற்றும் வாசிம் ஜுனியர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஹரிஸ் ராஃப் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இஃப்திகார் அஹ்மத் மற்றும் உசாமா மிர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
45.1 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 204 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது
வாசிம் ஜூனியர் பந்துவீச்சில் டஸ்கின் அஹ்மத் கிளீன் போல்டானார்.
பொறுப்புடன் விளையாடி வந்த மெஹிதி ஹாசன் 25 ரன்கள் சேர்த்து இருந்தபோது, வாசிம் ஜுனியர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
43 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 200 ரன்களை சேர்த்துள்ளது.
40 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை சேர்த்துள்ளது.
நிதானமாக ஆடி வந்த ஷகிப் அல் ஹசன் 64 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்த நிலையில் ஹரிஸ் ராஃப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
39 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 183 ரன்களை சேர்த்துள்ளது.
இஃப்திகார் வீசிய போட்டியின் 37வது ஓவரின் முதல் 3 பந்துகளிலும் பவுண்டரி அடித்து அசத்தினார் ஷகிப் அல் ஹசன்
7 ஓவர்கள் வீசியுள்ள ஷாஹித் அஃப்ரிடி 19 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இதி ஒரு மெய்டன் ஓவரும் அடங்கும்.
35 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை எடுத்துள்ளது.
32 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை சேர்த்துள்ளது.
7 ரன்கள் சேர்த்து இருந்த போது ஹ்ரிதாய், உசமா மிர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்
நிதானமாக விளையாடி 70 பந்துகளில் 56 ரன்களை சேர்த்த மஹ்மதுல்லா, அஃப்ரிடி பந்துவிச்சில் கிளீன் போல்டானார்.
30 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 4 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்களை சேர்த்துள்ளது
25 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 109 ரன்களை சேர்த்துள்ளது
23 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 104 ரன்கள் சேர்த்துள்ளது.
21 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் 102 ரன்களை சேர்த்துள்ளது.
பொறுப்பாக விளையாடி 45 ரன்கள் சேர்த்த லிட்டன் தாஸ், இஃப்திகார் அஹ்மத் பந்துவீச்சில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 96 ரன்களை சேர்த்துள்ளது.
19 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 85 ரன்களை சேர்த்துள்ளது.
15 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 66 ரன்களை சேர்த்துள்ளது
13 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 61 ரன்களை சேர்த்துள்ளது.
11.2 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 50 ரன்களை எட்டியது
11 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 48 ரன்களை சேர்த்துள்ளது
முதல் 10 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகளை இழந்து 37 ரன்களை எடுத்துள்ளது.
8 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 32 ரன்களை சேர்த்துள்ளது.
6 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 3 விக்கெட்டுகளை இழந்து 23 ரன்களை சேர்த்துள்ளது.
முஷ்பிகுர் ரஹீம் 5 ரன்கள் சேர்த்து இருந்தபோது ஹரிஸ் ராஃப் பந்துவீச்சில் கேட்ச் முறையில் ஆட்டமிழந்தார்.
4 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து வங்கதேசம் அணி 9 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது.
வெறும் 4 ரன்கள் மட்டும் சேர்த்து அஃப்ரிடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார் ஷாண்டோ
ஷாஹீன் அஃப்ரிடி முதல் ஓவரிலெயே விக்கெட் எடுத்ததோடு, ரன் ஏதும் கொடுக்காமல் மெய்டன் ஆக்கினார்.
முதல் ஓவரிலேயே ரன் ஏதும் எடுக்காமல் தன்ஜித் ஹாசன், எல்பிடபள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
லிட்டன் தாஸ், தஞ்சீத் ஹசன், நஸ்முல் ஹுசைன் சாண்டோ, ஷாகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹிம் (விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா, தௌஹீத் ஹ்ரிடோய், மெஹ்தி ஹசன் மிராஜ், தஸ்கின் அகமது, முஸ்தபிஜுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம்.
அப்துல்லா ஷபிக், ஃபகார் ஜமான், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஆகா சல்மான், ஷாஹீன் அப்ரிடி, உசாமா மிர், முகமது வாசிம் ஜூனியர் மற்றும் ஹரிஸ் ரவுஃப்.
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
Background
உலகக் கோப்பை 2023ல் இன்று (செவ்வாய்க்கிழமை - அக்டோபர் 31) பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஹகிப் அல் ஹாசன் தலைமையிலான வங்கதேச அணியின் மோத இருக்கிறது. அரையிறுதிக்கான பந்தயத்தை கருத்தில் கொண்டு, இந்த போட்டி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த போட்டியிலும் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தால், அரையிறுதிப் போட்டியிலிருந்து வெளியேறி விடும்.
முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, தொடர்ந்து நான்கு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இத்தகைய சூழ்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பாபர் அணி வெற்றியுடன் திரும்ப முயற்சிக்கும். அதே நேரத்தில் நெதர்லாந்திடம் ஏற்பட்ட தோல்விக்கு பாகிஸ்தானிடம் பதிலடி கொடுக்க வங்கதேச அணியும் போராடும்.
பாகிஸ்தான் அணியில் மாற்றம் இருக்குமா..?
வங்கதேசத்திற்கு எதிரான இன்றைய போட்டியில் பாகிஸ்தான் அணியில் பல மாற்றங்கள் இருக்கலாம். தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக், ஆல்ரவுண்டர் முகமது நவாஸ், லெக் ஸ்பின்னர் ஷதாப் கான் ஆகியோர் அணியில் இருந்து விடுவிக்கப்படலாம். இந்த மூவருக்குப் பதிலாக ஹசன் அலி, ஃபகார் ஜமான், உசாமா மிர் ஆகியோர் அணிக்குள் நுழையலாம். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஷதாப் காயம் அடைந்தார். இதன் காரணமாக இன்றைய போட்டியில் அவர் விளையாடுவது கடினம்.
பிட்ச் எப்படி..?
கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் பாகிஸ்தான் - வங்கதேச அணிகள் மோதுகின்றன. ஈடன் கார்டன் மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற பிட்ச். வேகப்பந்து வீச்சாளர்கள் இங்கு பவுன்ஸ் ஏற்றி பேட்ஸ்மேன்களுக்கு தாக்குதலை தொடுக்கலாம். பனியின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச முடிவு செய்யலாம்.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
விளையாடிய மொத்த போட்டிகள்: 38
பாகிஸ்தான் வென்ற போட்டிகள்: 33
வங்கதேசம் வென்ற போட்டிகள்: 5
போட்டிகள் சமநிலையில்: 0
முடிவு இல்லாத போட்டிகள்: 0
உலகக் கோப்பையில் எப்படி..?
ஒருநாள் உலகக் கோப்பையில் இரு அணிகளும் இரண்டு முறை நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், இரு அணிகளும் தலா ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றன. 1999 உலகக் கோப்பையின் போது நார்தாம்ப்டனில் நடந்த குறைந்த ஸ்கோரின் ஆட்டத்தில் வங்கதேசம் அணி, பாகிஸ்தான் அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2019-ம் ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் பாகிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கடந்த 5 போட்டிகளின் நிலவரம்:
சமீபத்தில் லாகூரில் நடந்த ஆசிய கோப்பையின் போது இரு அணிகளும் மோதியது. இதில் பாகிஸ்தான் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஐந்து ஒருநாள் போட்டிகளில் மூன்றில் வங்கதேச அணி வென்றுள்ளது. ஆனால் இந்த போட்டிகள் அனைத்தும் 2015 மற்றும் 2018 க்கு இடையில் விளையாடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
கணிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி: ஃபகார் ஜமான்/இமாம் உல் ஹக், அப்துல்லா ஷபிக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), சவுத் ஷகீல், இப்திகார் அகமது, ஷதாப் கான்/உசாமா மிர், ஹசன் அலி, ஷஹீன் ஷா அப்ரிடி, முகமது வாசிம் மற்றும் ஹரிஸ் ரவுஃப்.
கணிக்கப்பட்ட வங்கதேச அணி: தஞ்சீத் ஹசன் ஷாகிப், லிட்டன் தாஸ், மெஹ்தி ஹசன் மிராஜ், நஸ்முல் ஹுசைன் சாண்டோ, ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), முஷ்பிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), மஹ்முதுல்லா, மஹேதி ஹசன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான் மற்றும் ஷோரிஃபுல் ரஹ்மான்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -