ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.
பாகிஸ்தானை வீழ்த்திய ஆப்கன்:
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் பிறகு 93 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 17.5 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு இலக்கை எட்டி வெற்றிபெற்றது. இதன்மூலம், டி20 கிரிக்கெட்டில் முதல் முறையாக பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி சாதனை படைத்துள்ளது.
இந்தநிலையில், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான 2வது டி20 போட்டி துபாயில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற இருக்கிறது. இந்திய நேரப்படி இந்த போட்டி இரவு 7.30 மணி தொடங்குகிறது.
மீண்டும் மோதல்:
ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஷித் கானும், பாகிஸ்தான் அணிக்கு ஷதாப் கானும் தலைமை தாங்குகின்றனர். 2022 டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு கேப்டன் பதவியில் இருந்து விலகினார் முகமது நபி. இதையடுத்து, ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஷித் கான் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதேபோல், பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாமுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, ஷதாப் கானுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டது. ஒருபுறம் தொடரை சமன் செய்ய பாகிஸ்தான் அணி முயற்சிக்கும் இந்த ஆட்டத்தில், மறுபுறம் பாகிஸ்தானுக்கு எதிரான முதல் இருதரப்பு தொடரை கைப்பற்றி ஆப்கானிஸ்தான் அணி சரித்திரம் படைக்கும்.
ஹெட் டூ ஹெட்:
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி 2013ஆம் ஆண்டு நடைபெற்றது. இரு அணிகளுக்கும் இடையே இதுவரை 4 டி20 போட்டிகள் நடந்துள்ளன. பாகிஸ்தான் அணி 3 ஆட்டங்களில் வெற்றியும், ஆப்கானிஸ்தான் ஒரு ஆட்டத்தில் வெற்றியும் பெற்றுள்ளன.
இரு அணிகளின் விவரம்:
ஆப்கானிஸ்தான் அணி: ரஷித் கான் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இப்ராஹிம் சத்ரான், உஸ்மான் கனி, செடிகுல்லா அடல், நஜிபுல்லா ஜத்ரான், அஃப்சர் ஜசாய், கரீம் ஜனத், முகமது நபி, அஸ்மத்துல்லா உமர்சாய், ஷரஃப்தீன் நைப்ரப், குல்பாடின் நயிப்ராப். ரஹ்மான், ஃபரீத் அகமது, ஃபசல் ஹக் ஃபரூக்கி, நவீன் உல் ஹக்.
பாகிஸ்தான் அணி: ஷதாப் கான் (கேப்டன்), அப்துல்லா ஷபிக், ஆசம் கான், ஃபஹீம் அஷ்ரப், இப்திகார் அகமது, எஹ்சானுல்லா, இமாத் வாசிம், முகமது ஹாரிஸ், முகமது நவாஸ், முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, சாம் அயூப், ஷான் மசூத், ஜமான் தாஹிர், ஜமான் தாஹிர்