Ruturaj Gaikwad: விஜய் ஹசாரே போட்டித் தொடரின் கால் இறுதிப் போட்டியில் மஹாராஸ்ட்ரா அணிக்காக ருத்ராஜ் கெய்க்வாட் ஒரே ஓவரில் 7 சிக்ஸர் பறக்கவிட்டு ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் பார்வையையும் தன் பக்கம் இழுத்துள்ளார்.
மஹாராஸ்ட்ரா உத்திர பிரதேச அணிகளுக்கு இடையிலான இரண்டாவது கால் இறுதிப் போட்டியின் 49வது ஓவரில் ஒரு நோ-பால் உட்பட மொத்தம் 7 பந்துகளை எதிர்கொண்டு 7 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ளார். இந்த ஓவரை உத்திர பிரதேச அணியின் சிவா சிங் வீசினார். தற்போது வரை ருத்ராஜ் கெய்க்வாட் 159 பந்துகளில் 10 ஃபோர், 16 சிக்ஸர் உட்பட மொத்தம் 220 ரன்கள் விளாசி களத்தில் நங்கூரம் போல் இருந்தார்.
50 ஓவர்கள் முடிவில் அணியின் ஒட்டுமொத்த ஸ்கோரே 330ஆக இருக்க ருத்ராஜ் கெய்க்வாட் மட்டும் 220 ரன்கள் விளாசி இரட்டைச் சதம் அடித்துள்ளார். இவரது ஸ்டைரைக் ரேட் 138.36 ஆக உள்ளது. அதேபோல், இந்த போட்டியில் மொத்தம் 9 ஓவர்கள் வீசியுள்ள உத்திர பிரதேச அணியின் சிவா சிங் மொத்தம் 88 ரன்கள் விட்டுகொடுத்துள்ளார். அதில் ருத்ராஜ் கெய்க்வாட் ஒரே ஓவரில் 7 சிக்ஸர் பறக்கவிட்டதில் மட்டும் 43 ரன்கள் ஆகும். இவரது எக்கானமி 9.80 ஆக உள்ளது.
தற்போது உத்திர பிரதேச அணி 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.