ஜனவரி 19, 2021 - இந்திய கிரிக்கெட் வரலாற்றில், குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மறக்க முடியாத ஒரு நாளாக அமைந்தது. காரணம், 32 ஆண்டுகளாக பிரிஸ்பேன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியை சந்திக்காத ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்னில், வீழ்த்தி வரலாறு படைத்தது இந்திய அணி.


கடந்த ஆண்டைப் பொருத்தவரை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவி இருந்தாலும், காபாவில் வென்ற போட்டி முதல் செஞ்சூரியினில் வென்ற போட்டி வரை என இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளை இந்திய அணி பதிவு செய்தது. கடந்த ஆண்டு இந்திய அணி விளையாடிய 14 டெஸ்ட் போட்டிகளில், 8 போட்டிகளில் வெற்றி பெற்று 3 போட்டிகளில் தோல்வியையும், 3 போட்டிகளை டிராவிலும் முடித்தது. இந்நிலையில், காபாவில் தடம் பதித்து வரலாற்று வெற்றியை பதிவு செய்து ஓராண்டு ஆகியிருக்கிறது.


ஜனவரி 15-ம் தேதி தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இந்த போட்டிதான் இந்திய அணி வீரர்கள் நடராஜனுக்கும், வாஷிங்டன் சுந்தருக்கும் அறிமுக டெஸ்ட் போட்டி! முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 369 ரன்கள் எடுத்தது. இந்த இன்னிங்ஸில், நடராஜன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.



அதனை அடுத்து, முதல் இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி, 336 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 294 ரன்கள் எடுத்து ஆல்-அவுட்டானது. இதில் சிராஜ் 5 விக்கெட்டுகளும், தாகூர் 4 விக்கெட்டுகளும் எடுத்தனர். 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. சேஸ் செய்த இந்திய அணிக்கு, சுபம் கில்லின் 91 ரன்கள், புஜாராவின் அரை சதம் கைக்கொடுக்க, கடைசி வரை ஆட்டமிழக்காமல் 89* ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்தார் பண்ட். இதனால், கடைசி டெஸ்ட் போட்டியை வென்று, 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி நாடு திரும்பியது இந்திய அணி.


1947-ம் ஆண்டில் இருந்து 7 போட்டிகளில் இந்திய அணி ஆஸ்திரேலியா பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் விளையாடி இருக்கிறது. இதில், 5 போட்டிக்ளில் தோல்வியையும், 1 போட்டி டிராவிலும் முடிந்திருக்கிறது. இதனால், கிட்டத்தட்ட 62 ஆண்டுகளுக்கு பிறகு காபா மண்ணில் இந்தியா வெற்றி பெற்றது.


62 ஆண்டுகளுக்கு பிறகு காபாவில் வெற்றியைப் பதிவு செய்த இந்திய அணி: வீடியோவைக் காண:





ஆஸ்திரேலியாவை பொருத்தவரை, தோல்வியில் ரெக்கார்டு செய்திருக்கிறது. 1988-ம் ஆண்டு காபாவில் வெஸ்ட் இண்டீஸிடம் தோல்வியை தழுவிய பிறகு 32 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவிடம் சொந்த மண்ணில் தோல்வி அடைந்திருக்கிறது. விராட் கோலி, அஷ்வின், ஜடேஜா, ஷமி, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கிய ரஹானே தலைமையிலான இந்திய அணி, வரலாறு படைத்தது மறக்க முடியாத டெஸ்ட் கிரிக்கெட் சம்பவங்களில் இடம் பெற்றிருக்கிறது.



மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண