ஆஷஸ் தொடர் முடிந்தவுடன், டெஸ்ட் ஜெர்ஸியிலேயே மதுபோதையில் இருந்ததற்காக இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் ஜோ ரூட், ஜேம்ஸ் ஆண்டர்சன் மீது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த விவகாரம் கிரிக்கெட் வட்டாரத்தில் கவனத்தை பெற்றிருக்கிறது.
உலகின் பாரம்பரியமிக்க டெஸ்ட் தொடர்களில் ஒன்று ஆஷஸ் டெஸ்ட் தொடர். ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தும் மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடர் உலகம் முழுவதும் கிரிக்கெட் ரசிகர்களால் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்நிலையில், வழக்கமாக ஆஷஸ் தொடர் நடந்து முடிந்தவுடன், இரு அணி வீரர்களும் மதுபானத்துடன் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டுக்கான ஆஷஸ் தொடர் முடிந்தவுடன் இரு அணி வீரர்களும் போதையில் இருந்துள்ளனர். அப்போது, ஐந்தாம் நாள் போட்டி முடிந்த இரவு முதல் அடுத்த நாள் காலை வரை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் ஜோ ரூட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சனும் மதுபோதையில் இருந்தது தெரிய வந்துள்ளது. ஆஸ்திரேலிய வீரர்கள் நாதன் லயன், அலெக்ஸ் கேரி, டிராவிஸ் ஹெட் ஆகியோருடன் மது போதையில் பொது இடங்களில் சுற்றியவர்களை போலீசார் விசாரித்துள்ளனர். இதனால், ஆஷஸ் தொடர் முடிவிலும் ஒரு சர்ச்சையோடு முடிந்திருக்கிறது.
முன்னதாக, 2022 ஆண்டுக்கான ஆஸ்திரேலிய இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரின் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹோபார்ட் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 271 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்திருந்தது. ஆனால் இங்கிலாந்து அணி 124 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்து படு தோல்வி அடைந்தது. மேலும் ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலிய அணி 4-0 என்ற கணக்கில் வென்று அசத்தியது. ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் மழை குறுக்கிட்டதால் அந்தப் போட்டி டிராவில் முடிந்தது.
ஆஸ்திரேலியாவின் வெற்றி கொண்டாட்டம்:
இஸ்லாம் தடைசெய்யப்பட்ட சில விஷயங்களில் மதுவும் ஒன்று. ஆஸ்திரேலியா அணி வீரர்கள் கோப்பையை பெற்றபோது ஷாம்பியன் பாட்டிலை குலுக்க தயாராக இருந்தனர். கவாஜா ஒரு முஸ்லீம் என்பதால் அதில் இருந்து விலகி ஓரமாக நின்றார். இதைபார்த்த பேட் கம்மின்ஸ் தனது அணி வீரர்களிடம் ஷாம்பியன் பாட்டிலை குலுக்க வேண்டாம் என்று தெரிவித்து கவாஜாவை அணியினரிடம் புகைப்படம் எடுத்துக்கொள்ள அழைத்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்