அப்பப்பா.. 2023ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடரை இந்தியா நடத்த திட்டமிட்டது தொடங்கி இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் மற்றும் சர்வதேச கிரிக்கெட் சம்மேளமும் மாறி மாறி அப்டேட்டுகளை விட்டுக்கொண்டு உள்ளன. குறிப்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தொடரை நடத்த திட்டமிட்டுள்ள மைதானங்களுக்கு தலா ரூ 50 கோடி நிதியை அளித்து மேம்படுத்தக் கூறியது தொடங்கி, போட்டிக்கு உலகம் முழுவதும் இருந்து ரசிகர்களை வரவழைக்க வேண்டும் என்ற நோக்கில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் விற்பனை செய்வது தொடர்பான ஒப்பந்தங்கள் வரை உலகக்கோப்பைக்கான ஏற்பாடுகள் மின்னல் வேகத்தில் நடைபெறவுள்ளன.
இதில் நாளை முதல அதாவது ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி முதல் போட்டிகளுக்கான முன்பதிவுகள் தொடங்கவுள்ளது. அதில் உலகக்கோப்பைக்கான லீக் போட்டிகள், அரையிறுதிப் போட்டிகள், இறுதிப் போட்டி மற்றும் இவற்றிக்கு முன்பாக நடத்தப்படவுள்ள பயிற்சி ஆட்டங்கள் என அனைத்திற்கும் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படவுள்ளன.
இதில் ஏற்கன்வே உலகக்கோப்பைக்கான அட்டவணைகள் முதல் கட்டமாக அறிவிக்கப்பட்டு அதன் பின்னர் இரண்டு முறை அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பயிற்சி ஆட்டங்கள் தொடர்பான அட்டவணை மட்டும் இன்னும் வெளியிடப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது ஐசிசி பயிற்சி ஆட்டங்களுக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. அனைத்து பயிற்சி ஆட்டங்களும் இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு துவங்குகிறது.
செப்டம்பர் 29 வெள்ளிக்கிழமை
பங்களாதேஷ் vs இலங்கை, பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம், கவுகாத்தி
தென்னாப்பிரிக்கா vs ஆப்கானிஸ்தான், கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானம், திருவனந்தபுரம்
நியூசிலாந்து vs பாகிஸ்தான், ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம், ஹைதராபாத்
செப்டம்பர் 30 சனிக்கிழமை
இந்தியா vs இங்கிலாந்து, பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம், கவுகாத்தி
ஆஸ்திரேலியா vs நெதர்லாந்து, கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானம், திருவனந்தபுரம்
அக்டோபர் 2 திங்கட்கிழமை
இங்கிலாந்து vs வங்கதேசம், பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம், கவுகாத்தி
நியூசிலாந்து vs தென் ஆப்பிரிக்கா, கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானம், திருவனந்தபுரம்
அக்டோபர் 3 செவ்வாய்
ஆப்கானிஸ்தான் vs இலங்கை, பர்சபரா கிரிக்கெட் ஸ்டேடியம், கவுகாத்தி
இந்தியா vs நெதர்லாந்து, கிரீன்ஃபீல்ட் சர்வதேச மைதானம், திருவனந்தபுரம்
பாகிஸ்தான் vs ஆஸ்திரேலியா, ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம், ஹைதராபாத்
2023 ஐசிசி உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் அட்டவணை
போட்டி எண் | தேதி | நாள் | அணி 1 | அணி 2 | இடம் | நகரம் | நேரம் |
---|---|---|---|---|---|---|---|
5 | அக்டோபர் 8 | ஞாயிற்றுக்கிழமை | இந்தியா | ஆஸ்திரேலியா | எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் | சென்னை | பிற்பகல் 2:00 |
8 | அக்டோபர் 11 | புதன் | இந்தியா | ஆப்கானிஸ்தான் | அருண் ஜெட்லி மைதானம் | டெல்லி | பிற்பகல் 2:00 |
13 | அக்டோபர் 14 | சனிக்கிழமை | இந்தியா | பாகிஸ்தான் | நரேந்திர மோடி மைதானம் | அகமதாபாத் | பிற்பகல் 2:00 |
17 | அக்டோபர் 19 | வியாழன் | இந்தியா | பங்களாதேஷ் | MCA ஸ்டேடியம் | புனே | பிற்பகல் 2:00 |
21 | அக்டோபர் 22 | ஞாயிற்றுக்கிழமை | இந்தியா | நியூசிலாந்து | HPCA ஸ்டேடியம் | தர்மசாலா | பிற்பகல் 2:00 |
29 | அக்டோபர் 29 | ஞாயிற்றுக்கிழமை | இந்தியா | இங்கிலாந்து | ஏகானா ஸ்டேடியம் | லக்னோ | பிற்பகல் 2:00 |
33 | நவம்பர் 2 | வியாழன் | இந்தியா | இலங்கை | வான்கடே மைதானம் | மும்பை | பிற்பகல் 2:00 |
37 | நவம்பர் 5 | ஞாயிற்றுக்கிழமை | இந்தியா | தென்னாப்பிரிக்கா | ஈடன் கார்டன்ஸ் | கொல்கத்தா | பிற்பகல் 2:00 |
43 | நவம்பர் 12 | ஞாயிற்றுக்கிழமை | இந்தியா | தகுதி 1 | எம் சின்னசாமி ஸ்டேடியம் |