ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2023 வரும் 30 ஆம் தேதி முதல் துவங்கவுள்ள நிலையில், ஆறு அணிகளும் அதற்கு தயாராகி வருகின்றன. முதல் போட்டி இந்த மாதம் 30 ஆம் தேதியே துவங்கினாலும், இந்தியாவிற்கு முதல் போட்டி செப்டம்பர் 2 ஆம் தேதிதான் துவங்குகிறது. அந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியோடு மோதுகிறது. 15 சீசன்கள் நடைபெற்றுள்ள இந்த தொடர், இந்த போட்டிகள் ஒரே ஒரு முறை மட்டுமே இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் நடத்தப்பட்டுள்ளன. மற்ற நேரங்களில் பொதுவாக இவை, UAE, வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் மட்டுமே நடைபெற்று வருகின்றன. இம்முறை இலங்கையிலும் பாகிஸ்தானிலும் ஹைப்ரிட் முறையில் முதன் முறையாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி இந்த தொடரை அதிக முறை வென்ற அணியாக உள்ளது. இதுவரை 14 தொடர்களில் பங்கேற்று 7 முறை கோப்பை வென்றுள்ள இந்திய அணி, மொத்தம் 10 முறை இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது (1986 இல் நடந்த இரண்டாவது ஆசியக் கோப்பை போட்டியில் இந்திய அணி ஆடவில்லை). 

1984 மற்றும் 1986

முதல் இரண்டு ஆசியக்கோப்பை போட்டிகளில் மூன்று அணிகள் மட்டுமே கலந்து கொண்டதால் அவற்றில் இறுதிப்போட்டிகள் நடத்தப்படவில்லை. புள்ளிப்பட்டியல் அடிப்படையில் முதலிடத்தில் உள்ள அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. அதன்படி முதல் தொடரை இந்திய அணி வென்றது இரண்டாவது தொடரில் இந்திய அணி கலந்துகொள்ளவில்லை. மூன்றாவது அணியாக வங்கதேசம் புதிதாக கலந்துகொண்டது. அதில் இலங்கை அணி கோப்பையை வென்றது. 

1988

முதன் முதலில் இறுதிப்போட்டி நடைபெற்றது 1988 ஆசியக் கோப்பை போட்டியில்தான். அதிலும் இந்திய அணி இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை தட்டிச்சென்றது.

1991

இந்த தொடரில் பாகிஸ்தான் அணி களம் காணவில்லை. மூன்று அணிகள் மட்டுமே பங்கேற்ற இந்த தொடரில் வங்க தேசம் வெளியேற, இறுதிப்போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

தொடர்புடைய செய்திகள்: Tilak Varma: ஆசியக்கோப்பை அணியில் திலக் வர்மா… ஏன் இவ்வளவு விமர்சனம்? மூன்று முக்கிய காரணங்கள் இதுதான்!

1995

4 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் இந்தியா இலங்கை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அசாருதீன் ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் எடுத்து வெற்றிக்கு காரணமாக அமைந்தார்.

ஆண்டு

இரண்டாம் இடம்

வெற்றி வித்தியாசம்

நடத்திய நாடு

1984

இலங்கை 

இறுதிப்போட்டி இல்லை

UAE 

1988

இலங்கை

6 விக்கெட்

வங்கதேசம்

1991

இலங்கை

7 விக்கெட்

இந்தியா

1995

இலங்கை

8 விக்கெட்

UAE 

2010

இலங்கை

81 ரன்கள்

இலங்கை

2016 (T20)

வங்கதேசம்

8 விக்கெட்

வங்கதேசம்

2018

வங்கதேசம்

3 விக்கெட்

UAE

2010

இடையிடையே மூன்று முறை இறுதிப்போட்டிக்கு வந்தாலும், 15 ஆண்டுகளாக கோப்பையை வெல்லாமல் இருந்த இந்திய அணி 2010இல் தான் கோப்பையை வென்றது. இலங்கையில் நடந்த இந்த தொடரில் இம்முறையும் இறுதிப்போட்டியில் இலங்கை அணிதான் எதிரில் இருந்தது. இதில் இந்திய அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வென்றனர். 

2016

முதன்முதலில் டி20 வடிவில் ஆடப்பட்ட ஆசியக்கோப்பையான இதிலும் இந்திய அணிதான் வென்றது. மழையால் 15 ஒவர்களாக குறைக்கப்பட்ட போட்டியில் வங்கதேச அணி 120 ரன்கள் குவிக்க, தொடர்ந்து ஆடிய இந்திய அணி 2 விக்கெட் மட்டுமே இழந்து 7 பந்துகள் மீதமிருக்க இலக்கை எட்டியது. 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி கோப்பையை வென்றது. 

2018

மீண்டும் ஒருநாள் போட்டி வடிவில் நடைபெற்ற இந்த ஆசியக்கோப்பை தொடரில் இந்திய அணி மீண்டும் இறுதிப்போட்டியில் வங்க தேசத்தில் சந்தித்தது. அந்த போட்டியில் 222 ரன்களை குவித்த வங்கதேச அணியை தொடர்ந்து ஆடிய இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழந்து கடைசி பந்தில் த்ரில் வெற்றியைக் கண்டது.